retrospective utilization reviews
கடந்த கால (சிகிச்சை முறை) பயன்பாட்டைப் பற்றிய பரிசீலனை, கொடுக்கப்பட்ட சிகிச்சை முறை பற்றிய பரிசீலனை
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில், காப்பீடு செய்யப்பட்ட ஒருவருக்கு கொடுக்கப்பட்ட அல்லது நடந்து முடிந்த சிகிச்சை தேவையானதுதானா அதனால் விளைந்த பயன்கள் என்ன என்பது பற்றி பரிசீலிக்கும் நடைமுறை. சிகிச்சைக்குச் செலவான தொகையைக் காப்பீடு நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது, காப்பீடு நிறுவனங்கள் இயல்பாகவே, சிகிச்சையளிக்கப்பட்ட விதம், அதன் பயன் மற்றும் திருப்பிக் கேட்கும் கட்டணம் போன்றவற்றை பரிசீலனை செய்து, அதில் சந்தேகம் ஏற்பட்டாலோ, சிகிச்சையால் பலனில்லை என்றாலோ, காப்பீட்டுத் தொகை வழங்குவதை நிறுத்தி வைக்கலாம். இது சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்தும், சிகிச்சை பெற்றவரின் கருத்தை அறிந்தும் செயப்படும். சிகிச்சை முடிந்த பின்பு நடத்தப்படும் இந்தப் பரிசீலனை நியாயமற்றது என்று கருதப்பட்டதால், தற்போது, சிகிச்சை கொடுக்கப்பட்டால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்ற முன்னறிவிப்பைப் பரிசீலனை செய்தும், சிகிச்சையின் போது கையாளப்படவிருக்கின்ற முறைகள் குறித்த பரிசீலனையும் காப்பீட்டுக் கட்டணம் திரும்ப வழங்குவதில் கையாளப்படும் நடைமுறைகளாகின்றன.
English
A managed care procedure to determine whether a completed medical treatment had been necessary and effective. Reimbursement for the service would be withheld if the review concluded that the treatment had not been necessary or effective. Usually this was done by reviewing the professional's records and sometimes by interviewing the professional and the patient. Retrospective utilization reviews were considered unfair if performed solely after the treatment; thus, these reviews are now more commonly used in conjunction with prospective utilization reviews and concurrent utilization reviews.