Rett's disorder
ரெட்ஸ் சீர்கேடு
தமிழ் விளக்கம்
ரெட்ஸ் சீர்கேடு என்பது ஆன்றியஸ் ரெட் என்ற மருத்துவரால் கண்டறியப்பட்டதால் அவர் பெயரில் வழங்கும், விரும்பத்தகாத / பரவலாகக் காணப்படும் வளர்ச்சிச் சீர்கேடுகளில் ஒன்று.. இந்த வளர்ச்சிச் சீர்கேடுகள் நிறப்பிரிகை வகைக் கோளாறு (spectrum disorder) என்கிறார்கள். இந்த நோய்களினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியோ அல்லது ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. இது, ஒரு குழந்தை பிறந்து இயல்பான வளர்ச்சியை அடைந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அக்குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவு. 2 வயது தொடங்கி 10 வயதிற்குள் ஒரு குழந்தை தான் பெற்ற திறன்களையெல்லாம் (பேசுவதில், பழகுவதில், பிறருடன் ஒத்துப்போவதில்) படிப்படியாக இழந்து, அந்தத் திறனிழப்பே வாழ்நாள் முழுதும் நீடிக்கும் நிலை. இந்த வளர்ச்சிச் சீர்கேடுகளில் முக்கியமானவை. 1. ஆட்டிசம் எனப்படும் மதியிறுக்கம், புற உலகச் சிந்தனைக் குறைபாடு, ஒருவகையான நரம்புக்கோளாறினால் ஏற்படும் மன இறுக்கம், சமூகத் தொடர்பு சீர்குலைவு (autistic disorder), 2. ரெட்ஸ் சீர்கேடு (Rett's disorder) 3. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பழக்க வழக்கங்கள், தகவமைப்புத் திறன்கள், தன்மைய சீர்கேடுகள் (childhood disintegrative disorder) மற்றும் 4. செய்ததே செய்வதாலும், கூறியதையே கூறுவதாலும் சமூகத் தொடர்புகளில் சிக்கல் ஏற்படுத்தும் சீர்கேடு (Asperger's disorder) போன்றவை முக்கியமானதாகும். இதில் ரெட்ஸ் குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பிறக்கும்போது பெரிதாகக் குறைபாடு இருக்காது. பிறந்த சில காலம் சாதாரணக் குழந்தை போலவே இருப்பார்கள். ஆனால் குழந்தை வளர வளர பிரச்னை வெளிப்படையாகத் தெரியவரும். ஆடிஸ குழந்தை போலவே, பிற குழந்தைகள் மற்றும் சிறுவர்களோடு சேரமாட்டார்கள். சமூகத்தொடர்பின்றி காணப்படுவார்கள். ஆடிஸப்பாதிப்பு பெரும்பாலும் ஆண் குழந்தைகளிடம்தான் காணப்படும் ஆனால் ரெட்ஸ் குறைபாடு பெரும்பாலும் பெண் குழந்தைகளையே பாதிக்கிறது. இக் குறைபாடு பிரசவத்திற்கு பின்னால் ஏற்படும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் நரம்பியல் கோளாறு. இந்த மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து பெறப்படுபவை அல்ல மாறாக சந்தர்ப்ப மாற்றத்தால் ஏற்படும் மரபணுச் சீர்குலைவால் ஏற்படுவது.
English
One of the pervasive developmental disorders in which, following a few months of normal development and functioning after birth, the child (usually female) declines. There is deceleration of head growth, loss of previously acquired motor skills, and severely impaired language development. The disorder begins before age four, and in most cases recovery is limited. See also autistic disorder.