reunification service

மீளொருங்கிணைக்கும் சேவை

தமிழ் விளக்கம்

வளர்ப்பில்லங்களில் வாழும் குழந்தைகளுக்கும், அவர்களின் மரபணுப் பெற்றோர்களுக்கும் பரஸ்பர உறவை மீட்டெடுத்து, அவர்கள் கூடிவாழ உதவும் சமூகப்பணியாளர்கள் மற்றும் பிறரின் முயற்சிகளை மீளொருங்கிணைக்கும் சேவை எனலாம். எந்தப் பிரச்சனைகளால் அவர்கள் பிரிய நேரிட்டதோ அந்தப்பிரச்சனைகளைத் தீர்த்து, அவர்களின் உறவுமுறையை மேம்படுத்தி, அவர்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி, பெற்றோரையும் குழந்தைகளையும் ஒன்றுசேர்ப்பது. அவர்கள் நேரடியாகச் சந்திக்கும் போது அனுசரணையாக உரையாடவும், அவர்கள் ஒன்றுசேர்ந்த பின்னர் அவர்களுடைய ஒருங்கிணைவை மேற்பார்வையிட்டு வலுப்படுத்தவும், சமூகப்பணியாளர்கள் தொடர்ந்து முயலுவார்கள்.

English

Interventions by social workers and others in foster care to help children and their birth parents develop mutual relationships to facilitate being able to live together again. After the problems that led to the separations are resolved or improved, the workers often act as go-betweens to restore lines of communication. Then they may act as facilitators of face-to-face communication and finally as monitors and consultants in followup after the reunion has taken place.