revenue sharing
வருவாய்ப் பகிர்வு
தமிழ் விளக்கம்
ஒரு மேல்நிலை அரசாங்கம் தன்னுடைய வருவாயின் குறிப்பிட்ட சதவீதத்தை அடுத்த நிலையிலிருக்கும் அரசுகள் அல்லது அரசு அமைப்புகளோடு பகிர்ந்துகொள்ளும் நடைமுறை. இந்தியாவில் இது அரசியல் சாசனச் சட்டத்தில் குறிப்பிட்ட முறைகளின்படியும், அதற்கென்று ஏற்படுத்தப்பட்ட நிதிக்குழுவின் பரிந்துரையின்படியும் பங்கீடு செய்யப்படுகிறது. சில திட்டங்களின் செலவினங்களை மத்திய அரசே நேரடியாகவும், சில திட்டங்களின் செலவினங்களை மாநில மற்றும் ஸ்தல ஸ்தாபன அரசுகளோடு இணைந்தும், குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளித்தும், சில வருவாய் இனங்களை முற்றிலும் மாநில அரசுகளுக்குக் கொடுத்தும், சில வருவாய் இனங்களில் குறிப்பிட்ட சதவீதத்தை மாநில அரசுகளுக்குக் கொடுத்தும், நிதி வருவாய் பங்கீடு செய்யப்படுகிறது. இதே முறையைத்தான் மாநில அரசுகள், தங்களுக்குக் கீழுள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் / அரசுகளுடன் பங்கீடு செய்துகொள்கிறது.
English
The government process of dividing a proportion of its income, which comes from taxes, and contributing those funds to another level or sector of government that provides needed services to the people. The State and Local Fiscal Assistance Act of 1972 (P.L. 92-512) used the revenue-sharing idea to provide states and localities with specified portions of federal income tax collections for certain local health, education, welfare, and criminal justice programs. See also apportioned tax.