reverse brainstorming
எதிர்மறையான / நேர்மாறான / பின்னோக்கிய கருத்துதிர்ப்பு
தமிழ் விளக்கம்
கருத்துதிர்ப்பு என்றால் குழு உறுப்பினர்களின் மூளையைச் சுறுசுறுப்பாக்கி கருத்துக்களைத் தொகுத்தல், ஒரு குழுவானது, கொடுக்கப்பட்ட தலைப்பு / பொருளின் மீது திறந்த மனதுடன் கலந்துரையாடும்படியான சூழலை உருவாக்கி, அதில் பங்கேற்பவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்படியாக உற்சாகமூட்டி, பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களைத் தொகுப்பதன் மூலம் கிடைக்கும் தெளிவு. பின்னோக்கிய கருத்துதிர்ப்பு என்றால் ஒரு திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் செயல்குழுக்களிடம், அத்திட்டத்தினால் என்னவெல்லாம் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்பதை விவாதிக்க விடுவது. இந்த கருத்துதிர்ப்பு நிகழ்வில் அந்தத் திட்டத்தில் எங்கெல்லாம் தவறு நடக்க வாய்ப்புண்டு என்பதை விவாதிப்பதன் மூலம் தவறுகளைக் முன்னரே அறிந்து, அதைத் தவிர்க்க வாய்ப்பேற்படுகிறது.
English
A procedure used especially by task groups in which the negative consequences of proposed actions are quickly discussed. Members of the group are asked "what could go wrong" with the ideas presented in brainstorming sessions. These are listed and later considered along with ideas for overcoming the obstacles.