revolution
புரட்சி, அடிப்படை மாற்றம், முழுநிறை மாறுபாடு, பெருமாற்றம், திடீர் ஆட்சிமாறுபாடு, மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம், சுழற்சி, ஒரு தடவை சுற்றுஞ் சுற்று, புரட்டிப் போடுவது, நாட்டில் சமுதாயத்தில், வாழ்வில் பெரும் மாற்றத்தை விளைவிப்பது
தமிழ் விளக்கம்
புரட்சி ('ஓர் திருப்பம்' எனப் பொருள்படும் இலத்தீன் சொல் - revolutio. இது குறுகிய காலத்தில் அதிகாரத்தில், அந்தஸ்தில் அல்லது ஓர் நிறுவனக் கட்டமைப்பில் ஏற்படும் ஒரு அடிப்படை மாற்றம் ஆகும். அரிஸ்டாட்டில் இருவித அரசியல் புரட்சி பற்றி விவரித்துள்ளார்: 1. ஓர் அரசியல் அமைப்பிலிருந்து இன்னுமொன்றுக்குப் பூரணமாக மாறுவது. 2. இருக்கும் அரசியல் அமைப்பைத் திருத்துவது.
உலக வரலாற்றில் காலம், கருத்தியல் தூண்டல், மக்களை அரசாளக் கையாளப்பட்ட முறைகள், உற்பத்தி முறைகள் ஆகியவற்றினால் பல்வேறு பரந்த புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விளைவு கலாச்சாரம், பொருளாதாரம், சமூகம், அரசியல் நிறுவனம் ஆகியவற்றில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. மார்க்சீயப் பார்வையில் ஆளும் வர்க்கத்தின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தை அதிகாரத்தில் அமர்த்துவதன் மூலம் தனியுடைமை சமுதாயத்தை முடிவுக்குக் கொண்டுவருதலும், வர்க்கபேதமற்ற, சுரண்டலற்ற சமூகத்தை உருவாக்குவது புரட்சியாகக் கருதப்படுகிறது. ‘இதுவரை வாழ்ந்தது போல் இனிமேலும் இதுபோல் வாழ முடியாது என்ற முடிவுக்கு கோடானுகோடி மக்கள் வரும்பொழுது புரட்சிகள் தோன்றுகின்றன என்று லெனின் கூறுகிறார். வெளிப்படையான அநீதியை, திறனின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதற்காகவே புரட்சிகள் தோன்றுகின்றன. புரட்சிகள் அரசியல் புரட்சி, தொழிற்புரட்சி, கலாச்சாரப் புரட்சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

English
A sweeping change in the established order of things, usually after those who preferred the status quo are forced to relinquish their authority to those who sought change. Major types of revolution include political (in which a civil war or protest movement results in a new government structure), industrial (in which technology and invention change the way economic institutions are administered), and cultural (in which changes occur in values, norms, mores, and tastes).