revolving credit system
சுழற்சிக் கடன் அமைப்பு, சுழற்சிக் கடன் திட்டம்
தமிழ் விளக்கம்
ஒத்த தன்மையுள்ள உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள், தங்கள் சேமிப்பின் மூலம் முதலீட்டை உருவாக்கி, அந்த நிதியைக் கொண்டு தேவைப்படும் உறுப்பினர்களுக்கு சுழல் முறையில் கடன் அளித்து, அக்கடனைத் திரும்பப்பெற்று அதை மீண்டும் கடன் அளிக்க உபயோகப்படுத்தும் நடைமுறை. உறுப்பினர்களின் சேமிப்போடு, சில நேரங்களில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக அரசாங்கமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ வழங்கும் சுழல்நிதியையும் கடன் கொடுக்க உபயோகப்படுத்திக் கொள்வதுண்டு. வெளிஉதவியை அதிகமாகச் சார்ந்திராமல் உறுப்பினர்களின் சேமிப்பே சுழற்சி முறையில் கடனாக கொடுக்கப்படுவதால் இது சுழற்சி முறைக் கடன் திட்டம் எனப்படுகிறது.
English
A capital acquisition system funded through the savings of individuals and groups from the same ethnic or kinship group and dispersed to those in the group for use in starting businesses, getting education, or overcoming emergencies. Once the borrower has started the business or used the funds in the way specified, the money is repaid to the system for use by another member of the group for a similar purpose. This system has been most effective in those close-knit groups where failure to reimburse would be unthinkable.