Reynolds, Bertha Capen (1885-1978)

ரெனால்ட்ஸ், பெர்தா கேபின் (1885-1978)

தமிழ் விளக்கம்

ரெனால்ட்ஸ், பெர்தா கேபின் (1885-1978) - தலைசிறந்த சமூகப்பணிக் கல்வியாளர். எழுத்தாளர். தொழிலாளர்கள் உரிமைக்காகப் பாடுபட்டவர். சமூகப்பணியாளர்களுக்கு தொழிற்சங்கம் ஏற்படுத்த முனைந்தவர். அடிப்படையில் மார்க்ஸீயவாதியான இவரின் முற்போக்குக் கருத்துக்களை ஜீரணிக்கமுடியாத இவரின் கல்லூரி நிர்வாகம் இவரைப் பணிநீக்கம் செய்தது. முற்போக்கு சமூகப்பணியை முன்னெடுத்த இவரின் நினைவாக பெர்தா கேபின் ரெனால்ட்ஸ் சங்கத்தை (Bertha Capen Reynolds Society (B CRS), முற்போக்கு சமூகப்பணியாளர்கள் தோற்றுவித்தனர். இவர் எழுதிய புத்தகங்கள் - சமூகப்பணி தொடர்பாடலில் ஒரு பரிசோதனை (An Experiment in Short-contact Interviewing - 1932), சமூகப்பணி - கற்றலும் கற்பித்தலும் (Learning and Teaching in the Practice of Social Work - 1942), சமூகத் தனியாளர் பணி பற்றிய மறுசிந்தனை (Re-thinking Social Case Work - 1943), சமூகப்பணியும் சமூக வாழ்வும் - சமூகப்பணி தத்துவத்தில் ஒரு தேடல் (Social Work and Social Living: Explorations in Philosophy and Practice - 1951), பழக்கப்படாத பயணம் சமூகப்பணியின் 50 ஆண்டு கால வளர்ச்சி (An Uncharted Journey: Fifty Years of Growth in Social Work - 1963), வாடிக்கையாளருக்கும் சமுதாயத்திற்கும் இடையே - சமூகத் தனியாளர் பணியின் பொறுப்புக்கள் (Between Client and Community: A Study in Responsibility in Social Case Work - 1973) முக்கியமானதாகும்.

English

Social work educator, author, and advocate for the rights of workers, she sought to establish labor unions for social workers and others. An avowed Marxist, she was fired from her position in social work education and eventually worked for labor unions. The Bertha Capen Reynolds Society (B CRS), for progressive social workers, was established in her name.