rheumatic fever

வாதக் காய்ச்சல்

தமிழ் விளக்கம்

குழந்தைகளைப் பாதித்து இதயத்தின் வால்வுகளைச் சிதைக்கும் கொடிய தொற்று நோய்களில் முதன்மையானது வாதக் காய்ச்சல் நோய் (Rheumatic Fever). 5 வயது முதல் 15 வயது வரையிலுள்ள சிறுவர், சிறுமியரை ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற ஒரு வகை பாக்டீரியா கிருமி தொற்றுவதால், அக்குழந்தைகளுக்கு தொண்டைப் புண், தொண்டைக் கட்டு போன்றவை ஏற்படும். சில நாட்கள் சென்றபின் கால், கைகளில் உள்ள மூட்டுகளின் உட்புறம் பாதிக்கப்படும். பிறகு இதன் காரணமாக மூட்டுகள் மாறி, மாறி வலித்து வீங்கும். அதையொட்டி கடுமையான ஜுரம் வரும். இந்த ஜுரத்தையே வாதக் காய்ச்சல் என்கிறோம். நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கு மேற்பட்டோர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வாதக் காய்ச்சல் நோய், குழந்தைகளை மட்டுமல்லாது சில சமயங்களில் பெரியவர்களையும் தாக்குகிறது.

English

An infectious disease whose symptoms often include inflammation of the joints, fever, nosebleeds, and skin rash. In its more serious forms, there is inflammation of the heart valves, which may become scarred and deformed (rheumatic heart disease). Penicillin and extended rest are used in treating rheumatic fever. Maintenance doses of penicillin, often for several years, are sometimes given to children to prevent a recurrence of the fever, especially to prevent rheumatic heart disease.