rheumatoid arthritis
முடக்கு வாதம்
தமிழ் விளக்கம்
“வீங்கிய மூட்டுகள்” என்று அர்த்தமுடைய கிரேக்க வார்த்தைகளிலிருந்து “மூட்டு அழற்சி” என்ற இந்த வார்த்தை பிறந்துள்ளது. முடக்கு வாத மூட்டழற்சி (rheumatoid arthritis - RA), மூட்டுத் தேய்வு (osteoarthritis - OA) இரண்டும் வெவ்வேறானவை. முடக்கு வாதம் (Rheumatoid arthritis - RA) என்பது நாள்பட்ட, உள்பரவிய அழற்சியினை உருவாக்கும் ஒரு உடல்நலச் சீர்கேடாகும். இந்நோய், பல திசுக்களையும் உடல்உறுப்புகளையும் பாதிக்கும் என்றாலும் முதன்மையாக வளையுந்தன்மையுடைய மூட்டுகளையே (synovial joints) அதிகம் தாக்குகிறது. மூட்டுறை செல்கள் மிகைப் பெருக்கமடைவதால் (hyperplasia) உண்டான மூட்டுப்பை வீக்கம், அதிகப்படியான மூட்டுறைத் திரவம் (synovial fluid), நாரிழைய வளர்ச்சியினால் மூட்டுச்சவ்வில் உருவான படலம் (pannus) ஆகியவற்றினால் இரண்டாம் பட்சமாக விளையும் மூட்டுகளைச் சுற்றியுள்ள உறையின் மீதான அழற்சித் தாக்குதலை உள்ளடக்கியதாகும். இப்பிணிக்குரிய நோய் நிகழ் முறையினால் பொதுவாக மூட்டுக் கசியிழையம் (articular cartilage) அழிவடைவதும், மூட்டுகளில் எலும்புப் பிணைப்பு (ankylosis) ஏற்படுவதும் நிகழ்கிறது. முடக்குவாத நோய் பரவலான அழற்சியை நுரையீரல்களிலும், இதய உறையிலும் (pericardium), நுரையீரல் உறையிலும் (pleura), விழிவெண்படலத்திலும் (sclera), தோலுக்கடியில் உள்ள திசுக்களில் உருண்டைவடிவச் சிதைவுகளையும் (nodular lesions) ஏற்படுத்துகிறது. முடக்குவாத நோய் தோன்றுவதற்கான காரணங்கள் தெரியாவிட்டாலும், தன்னெதிர்ப்புக் காரணிகள் நாள்பட்டநோய் உருவாவதற்கும், நோய் தீவிரமடைவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, முடக்கு வாதம் ஒரு உள்பரவிய தன்னெதிர்ப்பு நோயாகக் கருதப்படுகிறது.
English
A form of arthritis that affects the joints and sometimes the lungs, nervous system, and other parts of the body. This disorder can affect young as well as older people and is often extremely painful.