Ribicoff children
ரிபிகாப் குழந்தைகள்
தமிழ் விளக்கம்
கனெக்டிகட் (Connecticut) மாநில ஆளுநராகவும், அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் நெருங்கிய நண்பரும், அவருடைய அமைச்சரைவில் சுகாதாரம், கல்வி, மற்றும் சமூகநலத்துறைச் செயலராகவும் பணியாற்றிய ரிபிகாப், 21 வயதிற்குக் குறைவான, யாரையும் சார்ந்திராமல் தனித்து வறுமைக்கு இலக்கான, தெருவோராக் குழந்தைகள் என்றழைக்கப்பட்ட, சந்தேகத்திற்கிடமில்லாமல் உதவி தேவைப்படுபம் இளைஞர்களுக்கு மருத்துவ உதவி, துணை வருமானத் திட்டம், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கான தற்காலிக உதவி போன்ற திட்டங்களின் மூலம் உதவி செய்யும் முறையைக் கொண்டுவந்தார். இந்த வரையறைகளின்படி உதவி பெற்ற குழந்தைகள் அவருடைய பெயராலே ரிபிகாப் குழந்தைகள் என்றழைக்கப்பட்டனர்.
English
People younger than 21 who meet the criteria of poverty but who are not considered dependent children, commonly called "street kids." Such children can be considered categorically needy and thus eligible for some Medicaid, Supplemental Security Income (SSI), Temporary Assistance to Needy Families (TANF), or other benefits. The name refers to Senator Abraham Ribicoff, who initiated legislation that made these young people eligible.