rickets
என்புருக்கி, என்பு என்றால் எலும்பு. ஆகுபெயராக அது உடலையும் குறிக்கும்.
தமிழ் விளக்கம்
எலும்புருக்கி நோய் - என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ், rickets) என்பது குழந்தைகளில் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிக்கிறது. பல வளரும் நாடுகளில், குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் அதிகம் காணப்படுவது என்புருக்கி நோயாகும். உயிர்ச்சத்து டி குறைபாடு மிக முக்கியமான காரணமாகும். ஆனால் உணவில் உள்ள கால்சியம் குறைபாடும் என்புருக்கி நோயை ஏற்படுத்தும் (தீவிரமான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி எடுத்தல் குறைபாட்டிற்குக் காரணமாகலாம்). இது வளர்ந்தவர்களையும் தாக்கக் கூடியதாக இருந்தாலும், குழந்தைப்பருவத்தில் வறுமை, பசி காரணமாக தீவிர ஊட்டச்சத்துக் குறைவோடு காணப்படும் குழந்தைகளில் தான் அதிகம் காணப்படுகிறது. பெரியவர்களுக்கு இதே போன்று ஏற்படும் நிலை எலும்பு வளைவு நோய் எனக் குறிப்பிடப்படுகிறது. இது பொதுவாக விட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படுகிறது. “ரிக்கெட்ஸ்” என்ற வார்த்தை வளைதல் என்பதைக் குறிக்கும் பழங்கால ஆங்கில வார்த்தையான ‘ரிக்கென்’ என்பதில் இருந்து வந்திருக்கக் கூடும். ஒரே போன்ற ஒலி அமைப்பு இருக்கும் காரணத்தினால் கிரேக்கத்தில் இருந்து வந்த வார்த்தையான “ராகிடிஸ் (rachitis” - முதுகுத் தண்டு வீக்கம்) என்ற வார்த்தையே ரிக்கெட்ஸ் அல்லது என்புருக்கி நோய்க்கான சரியான விஞ்ஞான பூர்வ வார்த்தையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
English
A bone disease caused by vitamin D deficiency. In children, the disease's symptoms include softening of the bones, enlargement of the cartilage, bowleggedness, and deformities in the chest and pelvis. With the addition of vitamin D to milk and the use of vitamin supplements, prevention of rickets has been effective in the United States.