right-brain thinker
வலது மூளைச் சிந்தனையாளர்கள்
தமிழ் விளக்கம்
மனித மூளை வலது, இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை வலது பக்கத்து மூளை, இடது பக்கத்து மூளை என்கிறோம். இடது பக்க மூளை ஐம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும்போது ஐம்புலன்வழி வருகிற, கிடைக்கிற செய்திகளை பகுத்து, தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து, அந்த அனுபவங்களை பகுக்கும் போதும், தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது. இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டும் செயல்படுகின்றது. இதனை நினைவு மனம் Conscious Mind, Rational Mind, Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள். இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களைக் கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது. ஆனால், வலது பகத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டுமொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும், கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணினியின் நினைவுத்தகடு (Floppy Disk) போல செயல்படுகிறது. நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது. சுயமாகச் சிந்திபது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றுகின்றது. இதனை ஆழ்மனம், Sub Concious Mind, Subjective mind, Sleeping Mind, Deep Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்.
English
A term applied to people who supposedly rely more on the right hemisphere of their brains-the apparent origins of emotions, creativity, and imagination-as opposed to the "left-brain thinker," who supposedly depends more on logic, mathematical rigor, and linear thinking.