right-to-life movement
வாழும் உரிமைக்கான இயக்கம்
தமிழ் விளக்கம்
கருக்கலைப்பை அனுமதிக்கும், எளிதாக்கும் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை மாற்ற முயற்சி செய்யும் தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் கட்டிறுக்கமற்ற (நெகிழ்வான) இயக்கம். இந்த இயக்கத்தை உயிர்ச் சார்பு இயக்கம் (prolife movemen) என்றும் சொல்லலாம். இவர்கள் கருமுளைக்கும் (ஜீவப்பொருளின் ஆரம்ப உரு), உருபெற்ற கருவிற்கும் (28 வாரம் முதிர்ந்த கரு) உயிர்வாழும் உரிமை உண்டென்று கருதுவதால், தேவையற்ற கருவுரலை கருக்கலைப்பின் மூலம் அழிக்காமல் மாற்று வழிகளைக் கையாண்டு தடுக்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இந்த இயக்கத்தவர்கள் விருப்புரிமை இயக்கத்தாரால் (prochoice) விமர்சிக்கப்படுகிறார்கள்.
பார்க்க: Prolife movement - உயிர்ச் சார்பு இயக்கம் - ரோய் Vs. வேட் (Roe v. Wade) வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருவுற்ற பெண் விரும்பும் பட்சம் கருக்கலைப்பு செய்துகொள்ளச் சட்டத் தடை இல்லை என்ற தீர்ப்பு, மனித வாழ்க்கை கருவிலிருந்து தொடங்குகிறது என்று கருதியவர்களை ஒன்றிணைத்து, கருக்கலைப்பிற்கு எதிராகச் செயல்படத் தூண்டியது. இது விருப்புரிமை இயக்கம், சுய நிர்ணய ஆதரவு இயக்கம் எனப்படும் prochoice இயக்கம், அமெரிக்க குடும்ப கட்டுப்பாடு இயக்கம் போன்ற இயக்கங்களின் கருத்தடைக்கு ஆதரவான செயல்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்தது.
Prochoice movement - விருப்புரிமை இயக்கம், சுய நிர்ணய ஆதரவு இயக்கம் - குழந்தை பெற்றுக் கொள்வதோ அல்லது கருக்கலைப்பு செய்து கொள்வதோ ஒரு பெண்ணின் சுயவிருப்ப உரிமையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிற இயக்கம். ஒரு பெண்ணின் இனப்பெருக்க உரிமை மீது, ஆணுக்கோ, அரசுக்கோ, பிற சமூக, மத சக்திகளுக்கோ உரிமை இல்லை என்ற கருத்தினடிப்படையில் உருவான இயக்கம். இதைக் கருத்தடைக்கு ஆதரவான இயக்கம், திட்டமிட்ட குடும்பத்திற்கு, குடும்பக் கட்டுப்பாடு முறைகளுக்கு ஆதரவான இயக்கம் என்றும் கொள்ளலாம். பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை, குழந்தை பெற்றுக்கொள்ளும் அல்லது கருக்கலைப்பு செய்துகொள்ளும் வாய்ப்புக்களை விரிவுபடுத்தத் தேவையான பொதுக்கருத்தை உருவாக்குதல், அதற்கு ஆதரவான சட்ட வரைவுகளைக் கொண்டுவருதல், கருக்கலைப்பிற்கும் பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான / ஆதரவான வசதிகளைச் செய்துதரல், அதற்கான நிதி திரட்டுதல் போன்ற முயற்சிகளில் இந்த இயக்கம் ஈடுபட்டுள்ளது. கருத்தடைக்கு எதிரானவர்கள் நடத்திய 'வாழ்விற்கு ஆதரவான இயக்கம்' (prolife) என்பதை எதிர்க்கும் முகமாகவே 'விருப்புரிமை இயக்கம்' என்று பெயரிட்டனர்.

English
A loosely coordinated body of groups, institutions, and individuals working to change laws and norms that permit and facilitate abortion. The movement is also referred to as the "prolife movement." Supporters of this movement emphasize the rights of the unborn embryo/fetus and encourage adoption and other alternatives to abortion for unwanted pregnancies. Religious and philosophical beliefs about the point at which human life begins are important in this movement. The movement is opposed by the prochoice movement. See also National Right-to-Life Committee (NRLC).