right to refuse treatment
சிகிச்சையை மறுக்கும் உரிமை
தமிழ் விளக்கம்
ஒரு நபரின் உயிருக்கு ஆபத்தான நிலையேற்படும் பட்சத்திலோ அல்லது அவர் ஆபத்தான நடத்தையில் ஈடுபடுவார் என்றிருக்கும் பட்சத்தைத் தவிர, பிற சமயங்களில் அவர் மருத்துவ சிகிச்சைக்கு உடன்படாதிருக்கவோ அல்லாது சிகிச்சை வேண்டாமென்று மறுக்கவோ அவருக்கு உரிமை உண்டென்பது பல வழக்குகளில் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமை ஆகும். சிகிச்சை என்பதில் சமூகப்பணி தலையீடும் அடங்கும். இது நோயாளிகளின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இந்த உரிமைகள் மனநல மருத்துவ மனைகளில் தன்விருப்பமற்று சேர்ந்த மன நோயாளிகளுக்கும், தண்டனை பெற்று சிறையிலோ அல்லது பிற சீர்திருத்த நிலையங்களிலோ சேர்க்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். இந்த அணுகுமுறை சமூகநல உதவித் திட்டங்களைப் பெறுபவர்களுக்கும் பொருந்தும். நல நிதி உதவி பெறுவதற்கான திட்டங்களில், பயனாளிகள் சமூகப்பணியாளர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கக்கூடாது என்றும் இச்சட்டம் வரையறை செய்துள்ளது.
English
The legal principle, upheld in numerous court cases or contained in explicit statutes in several states, that an individual may not be compelled to undergo any form of treatment, including social work intervention, unless there is a life-threatening emergency or the person exhibits seriously destructive behavior. This principle has been applied to people who are involuntarily committed to mental hospitals, prisons, and other institutions. It has also influenced the way social work services are integrated with income maintenance programs in public assistance programs. Thus, a public assistance recipient is no longer compelled to receive counseling to obtain financial aid.