right to treatment

சிகிச்சை பெரும் உரிமை

தமிழ் விளக்கம்

சிகிச்சை பெரும் உரிமை என்பது மனநலக் காப்பகங்களிலும், பிற சீர்திருத்த இல்லங்களில் சேர்க்கப்ப்ட்டவர்கள், முறையாகப் பராமரிக்கப்படாததை கண்டித்த இயக்கங்களின் வரலாற்றிலிருந்தும், இம்மாதிரியான நிறுவனங்களில் சேர்க்கப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயமான சிகிச்சை கிடைக்கும் பட்சம் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையை விசாரித்த நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் உருவானது. இந்த உரிமையின் அடிப்படையிலே மனநலக் காப்பகங்களிலும், சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த இல்லங்களில் போதுமான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பொது சுகாதார மேம்பாடும், அதன் தரத்தை மேம்படுத்த செய்யப்பட்ட முயற்சிகளும், பல நாட்டு அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ உதவி மற்றும் மருத்துவ பராமரிப்பு (medic aid & medic care) போன்ற பொது மருத்துவக் காப்பீடு திட்டங்களும் இதனடிப்படையில் உருவானதே.
பார்க்க: deinstitutionalization - நிறுவனங்களை அதன் வரையறுக்கப்பட்ட தன்மையிலிருந்து விடுவித்தல், அதிகாரத்துவம் மற்றும் சிக்கலான நடைமுறைகளிலிருந்து நிறுவனங்களை விடுவித்தல், நிறுவனத் தன்மையை கட்டவிழ்த்தல் - மன நோயாளிகளையும், பிற நோயாளிகளையும் மருத்துவ மனைகளிலிருந்தும், காப்பகங்களிலிருந்தும், வேறு சிகிச்சை நிலையங்களிலிருந்தும் விடுவித்து, மருத்துவப் பணியாளர்களின் மேற்பார்வையின் கீழ் சமுதாயத்திலே வைத்து சிகிச்சையும் பிற வசதிகளையும் செய்து தருவது.

English

The legal principle, established in the Wyatt v. Stickney decision, that an individual who is confined in an institution has the right to receive the treatment necessary to offer a reasonable chance for improvement so that the person can function independently and be released from that institution. This right has led many facilities that lack the resources for individual treatment to discharge their clients. See also deinstitutionalization.