right-to-work laws
வேலை உரிமைச் சட்டங்கள்
தமிழ் விளக்கம்
வேலை உரிமைச் சட்டம் என்பது பொதுவாக வேலை உத்தரவாதத்தைக் குறிக்கும். வேலை செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித்தர வேண்டுமென்பதே இதன் குறிக்கோள். இந்தியாவில் இந்த உரிமை வேலைக்கு உணவு போன்ற திட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA), இதை சட்டபூர்வமாக உறுதி செய்தது. இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
2. அமெரிக்க போன்ற முன்னேறிய பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பும் தொழிற்சங்க உறுப்பினராதாலும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதால், தொழிற்சங்க உறுப்பினரால்லாதார் வேலைவாய்ப்பு பெறமுடியாது. சங்க உறுப்பினர்களாக பதிவு செய்தால்தான் வேலைவாய்ப்பு பெறமுடியும் என்பதை சட்ட விரோதமாக்கி, அவரவர் விரும்பும் வேலையைச் செய்வதற்கு அனுமதியளித்த நடைமுறை.

English
Statutes in various jurisdictions that make it illegal for membership in a labor union to be a condition of employment.