right wing

வலது சாரி அரசியல் (right

தமிழ் விளக்கம்

wing, political right, rightist, the right) - வலது சாரி, வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர், அரசியலில் பழமைப் போக்கை அதாவது மரபு சார்ந்த அதிகாரத்தை ஆதரிப்பவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று ஆதரிக்கும் அரசியல்வாதிகளையும் ஏளனத்துடன் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். முதலாளித்துவக் கொள்கைகளை ஆதரித்தல் அல்லது அவ்வாறு ஆதரிப்பவரைப் பொதுவாக வலதுசாரிகள் என்பர். மேற்கு நாடுகளில் வலதுசாரி அரசியல் என்பது தீவிர வலது சாரிக் கொள்கைகளான இனவாதம், குறுந்தேசியவாதம், குடிவரவாளர் எதிர்ப்பு, சர்வதிகாரம், பழமைவாதம் போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய அரசியல் ஆகும். இது பாசிசம், நாசிசம், வெள்ளையின ஆதிக்கம் ஆகியவற்றுடன் பொதுவாகத் தொடர்புபடுத்தப்படுவது. வலதுசாரி (rightist) என்றால் அவர் பணக்கார்களின் ஆதாரவாளர், ஏழைகளின் எதிரி, தொழிலாளர்களைச் 'சுரண்டுபவர்', ஏகாதிபத்திய ஆதரவாளர், ஃபாசிசவாதி, மதவாதி, கொடூர நெஞ்சம் படைத்தவர் என்றும், இடதுசாரி (leftist) என்றால் அவர் ஒரு ஏழைப் பங்காளன், ஏற்ற தாழ்வுகளை அகற்றப் பாடுபடுபவர், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர், மதவாதத்தை எதிர்ப்பவர் என்றும் முத்திரை குத்தப்படுகிறது. இந்தப் புரிதல் தவறானது. வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல் பிரஞ்சு புரட்சியின் பொழுது அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சியை ஆதரித்தவர்களுக்கும், பிரபுக்கள் மற்றும் மத குருமார்கள் அமர்ந்திருந்த இருக்கைகளின் வலதுபுரம் அமர்ந்திருந்தவர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்லாடலாகும்.
பார்க்க: left-wing politics - இடதுசாரி - இடதுசாரி அரசியல் என்பது கருத்தியல் நோக்கில் சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அரசியல் நோக்கு அல்லது நிலைப்பாடு ஆகும். பொதுவாக இது சமூக ஏற்றத்தாழ்வுக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிரானது. இது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்கள் கவனிக்கப்பட வேண்டுமென்றும், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டுமென்றும் கருதுகிறது. அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் பிரெஞ்சுப் புரட்சியின்போது (1789-1799) உருவாயின. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், முடியாட்சியை ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், குடியரசு உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் 'இடது' என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இச்சொல் பல்வேறு இயக்கங்களைக் குறிப்பதற்குப் பயன்பட்டது. சிறப்பாகப் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் குடியரசியம், சமூகவுடமை, பொதுவுடமை, அரசின்மை போன்றவை இச்சொல்லால் குறிக்கப்பட்ட இயக்கங்களுள் அடங்குவன. 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கி, மனித உரிமைகள் இயக்கம், போர் எதிர்ப்பு இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் போன்ற மேலும் பல இயக்கங்கள் 'இடதுசாரி' என்னும் சொல்லினால் குறிக்கப்படலாயின. ஐக்கிய அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சி, தொழிற் கட்சி. ஆகியவை இடதுசாரி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.

English

A slang expression for a conservative sociopolitical orientation.