Riis, Jacob (1848-1914)

ரில்ஸ் ஜேக்கப் (1848-1914)

தமிழ் விளக்கம்

ரில்ஸ் ஜேக்கப் (1848-1914) - எழுத்தாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான இவர், அமெரிக்காவிலிருந்த சேரிகளின் அவலத்தைப் பற்றி எழுதிய புத்தகம், அமெரிக்கர்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப, அது பொருளாதாரச் சீர்திருத்ததிற்கும், ஏழைகளுக்கான மேலதிக உதவிகளையும் செய்யத் தூண்டியது. 1890 ல் இவர் எழுதிய, 'நம்மில் சரிபாதியினர் எப்படி வாழ்கிறார்கள்' (How the Other Half Lives) என்ற புத்தகம், அமெரிக்கர்களின் மனச் சாட்சியைத் தட்டியெழுப்ப, அவர்கள் அறக்கட்டளை அமைப்புகளுக்கு அதிக ஆதரவும், பொருளுதவியும் செய்ய ஆரம்பித்தனர். அறக்கட்டளை அமைப்பே அமெரிக்காவில் சமூகப்பணிக் கல்வியை வளர்த்தெடுத்தது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்து.

English

Writer and social reformer, whose descriptions of slum conditions awakened America to the need for economic reforms and better assistance for poor people. His most influential book, How the Other Half Lives (1890), led to widespread support for the Charity Organization Societies (COSs) movement, which in turn helped develop social work as a profession.