Ripple, Lillian (1911-1993)

ரிப்பிள், லிலியன் (1911 - 1983)

தமிழ் விளக்கம்

ரிப்பிள், லிலியன் (1911 - 1983) - ஜேன் ஆடம்ஸின் Hull House என்றழைக்கப்பட்ட சமுதாய ஊழியரகக் குடியிருப்புக் குழு அல்லது கூட்டுவாழ்வுக் குழு (Settlement House) வில் தனது சமூகப்பணியைத் தொடங்கிய இவர், சிறுதுகாலம் சிறார் நீதிமன்றத்தில் சமூகப்பணியாளராகப் பணியாற்றிய பின், .சிகாகோ பல்கலைக் கழகத்தின் சமூகப் பணித்துறையில் பேராசிரியை ஆகவும், சமூகப் பணிக்கல்விக்கான குழுவில் தலைவராகவும் பணியாற்றியவர். சமூகப்பணி ஆய்வு முறைகளில் ஆர்வம் காட்டியவர். சிறந்த சமூகப்பணிக் கல்வியாளர். சமூகப்பணி வாடிக்கையாளர்கள் எப்படி மாறுதலை சுவீகரித்துக் கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்து இவர் எழுதிய ஊக்கம், திறனுடமை மற்றும் வாய்ப்பு (Motivation, Capacity, and Opportunity) என்ற புத்தகம் சமூகப்பணியில் முக்கிய இலக்கியமாக கருதப்படுகிறது.

English

Pioneer in social work research and principal author of Motivation, Capacity, and Opportunity, one of the profession's first systematic attempts to determine how clients succeed. A long-time social work professor at the University of Chicago and a leader of the Council on Social Work Education (CSWE), she began her career as a volunteer at Hull House and as a juvenile court caseworker.