risk pool

இடர்ப்பாடுகளை ஒருங்கிணைத்தல்

தமிழ் விளக்கம்

காப்பீடு என்பது இடர்பாட்டினைக் கடப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் இடர் மேலாண்மை வடிவமாகும். பெரிய அளவிலான அதிர்ச்சியளிக்கும் இழப்பிற்கான வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஒரு சிறிய சந்தாவைப் (ப்ரீமியம்) பெற்று‚ அதன்மூலம் ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு இழப்பு இடர்பாட்டிற்கு சமமான மாற்றினை வழங்குவதே காப்பீடு ஆகும். காப்பீட்டுத் திட்டங்களே இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகுபவரை ஒருங்கிணைப்பது ஆகும். குறைந்த இடர்ப்பாடுகள் உள்ளவரை ஒருங்கிணைக்கும் போது, இழப்பீட்டுத் தொகை அதிகம் வழங்கவேண்டியதில்லை. மாறாக அதிக இடர்ப்பாடு உள்ளவர்களை ஒருங்கிணைத்தால் இழப்பீடுத்தொகை அதிகமாகும் என்பதால், காப்பீடு நிறுவனங்கள் அவர்களை இணைத்துக்கொள்ளத் தயங்கும் அல்லது சந்தாத் தொகையை அதிகப்படுத்தும். இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகும் பல்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கும் போது, அதிக இடர்ப்பாடு உள்ளவர்களுக்கு அது இலாபமாகவும், குறைந்த இடர்ப்பாடு உள்ளவர்களுக்கு அதிகச் செலவினம் கொண்டதாகவும் அமையும். சில நாடுகளில் அரசே எல்லோரையும் இணைத்து அரசே காப்பீடு செய்யும் போது, அதிக எண்ணிக்கையுள்ள பாலிசிதாரர்களால் காப்பீடு நிறுவனங்கள் பலனடையும்.

English

All the individuals and families an insurance company is obligated to cover against the financial consequences of a specified problem. In the climate of competition among insurance companies, the tendency is to make these pools highly restrictive, limited only to the youngest, most healthy people. This eliminates coverage for those most likely in need and ultimately places the financial burden on the general taxpayer population. When risk pools are larger and more inclusive, the cost burden for those at greater risk is reduced, but it is usually increased for those less at risk.