Robinson, Virginia (1883-1977)
ராபின்சன் விர்ஜீனியா (1883 - 1977)
தமிழ் விளக்கம்
ராபின்சன் விர்ஜீனியா (1883 - 1977) பென்ஸில்வேனியா பல்கலைக்கழக சமூகப்பணி பேராசிரியை, சமூகப்பணி தத்துவஞானி, சமூகப்பணியில் செயல்சார்ந்த சமூகப்பணி என்ற அணுகுமுறையை உருவாக்கியவர். சமூகத் தனியாளர் பணியில் 'உறவே சிகிச்சை' என்ற மந்திரச் சொல்லை உருவாக்கியவர், சமூகப்பணியாளரின் ஆளுமை எப்படி உருவாகிறதென்று எடுத்துக்கூறியவர், சமூகப்பணி ஒரு தொழில்முறை அறிவியலாக உருவாகத் தன் வாழ்நாள் முழுதும் முனைப்புடன் செயல்பட்டவர் என்ற பல பெருமைகளுக்கு உரித்தானவர். இவருடைய சமூகத் தனியாளர் பணியில் மாறிவரும் உளவியல் (A Changing Psychology in Social Casework in 1930) ஒரு முக்கிய சமூகப்பணி இலக்கியமாகக் கருதப்படுகிறது.
English
Social work theoretician and educator at the University of Pennsylvania, Robinson wrote the influential textbook A Changing Psychology in Social Casework in 1930 and developed important texts on supervision and training. With her longtime partner Jessie Taft, she developed the functional school in social work and influenced social work's movement toward a more intrapsychic orientation.