Roe v. Wade

ரோ vs வேட் வழக்கு

தமிழ் விளக்கம்

அமெரிக்கப் பெண்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க உச்ச்நீதிமன்றத் தீர்ப்பு. ஜேன் ரோ (இயற்பெயர் நார்மா மேக்கோர்வீ - Norma L. McCorvey) கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்பதை மாற்றக் கோரி தொடுத்த வழக்கில், சில சம்பவங்களில் கருக்கலைப்பு அரசியல் சட்டத்திற்கு முரணானதல்லவென்றும், கருவுற்ற முதல் மூன்று மாதத்திற்குள், கருவைக் கலைக்கும் முடிவை கருவுற்ற பெண்ணிடமும், மருத்துவரிடமும் கொடுத்துவிட வேண்டுமென்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இரண்டாவது மூன்று மாதத்தில் கருக்கலைப்பு செய்வதை மாநில அரசுகள் தாயின் நலன் கருதி கட்டுப்படுத்தலாமென்றாலும், கருவுற்ற பெண்மணி மருத்துவ ரீதியாகத் தகுதியாக இருந்தால் கருவைக் கலைத்துக் கொள்ளலாமென்றும், மாநிலச் சட்டங்கள் அதைத் தடை செய்யக்கூடாததென்றும் அத்தீர்ப்பு கூறியது. மூன்றாவது மூன்று மாதத்தில் கருவுற்ற தாயின் உயிரைக் காக்க மட்டுமே கருக்கலைப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்று கூறியது. இந்தத் தீர்ப்பு கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்ற மாநிலச் சட்டங்களைச் செல்லாததாக்கியது. இந்தத் தீர்ப்பு விருப்புரிமை இயக்கத்தவரால் (prochoice movement) ஆதரிக்கப்பட்டும், உயிராதரவு இயக்கத்தவரால் (right-to-life movement) விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இருந்தாலும் இச்சட்டம் பெண்ணிய வாதிகள் முன்னெடுத்த 'எனது உடல் எனது உரிமை' (My body My Choice) என்ற முழக்கத்திற்கு வலுசேர்த்தது.

English

The 1973 decision by the U.S. Supreme Court that state laws forbidding abortion were unconstitutional under specified circumstances. The Court held that, in the first trimester, abortion must be left to medical judgment. In the second trimester, the state may, if it chooses, regulate abortion to protect maternal health but may not prohibit abortion. In the third trimester, the state may regulate or prohibit abortion except when necessary to preserve the mother's life. The decision has been the source of considerable controversy, and there have been numerous challenges in the courts. Political action in support of the decision is led by the prochoice movement, and the opposition is led by the right-to-life movement.