role

role

தமிழ் விளக்கம்

வகி பாகம் (வகிக்கின்ற பாகம், பாத்திரம்), செயல்பங்கு, வாழ்க்கைப்பங்கு, பழகுமுறை, பழகும்பண்பு, நாடகப் பாத்திரம், தனிமனிதர் கடமைக்கூறு, ஸ்தானம் - role என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பாத்திரமேற்றல் என்று பொருள்படும். ஒருவர் வாழ்க்கையில் வகிக்கின்ற பாகம், ஒருவர் ஏற்றுச் செய்கின்ற கடமைகள். ஒருவர் வகிக்கும் பொறுப்பு / பதவி என்று விரிவாகப் பொருள் கொள்ளலாம். மனிதர்கள் மட்டுமல்ல அக்ரினைப் பொருள்களின் பங்களிப்பைக் குறிக்கவும், (எடுத்துக்காட்டாக கால்நடைகளின் பங்கு, சாலைகளின் பங்கு, நீர்நிலைகளின் பங்கு) பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாக ஒரு செயலைச் செய்வதற்கு கையாளப்படும் முறைகளைக்கூட இச்சொல் குறிக்கும்.
1. ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் இருப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறித்த கலாச்சார வரையறைகளையும், பரிந்துரைகளையும் வகிபாகம் எனலாம். 2. வகிபாகம் என்பது ஒரு சமூக ஸ்தானத்திற்காக கலாச்சாரம் வரையறுத்துள்ள உரிமைகள், கடமைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் நடத்தை நெறிகளைப் பின்பற்றுவது. 3. வகிபாகம் என்பது ஒரு சமூக ஸ்தானத்தை வகிப்பவர்களிடமிருந்து எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்பற்றிய ஸ்திரமாக்கபட்ட எதிர்பார்ப்புக்கள். 4. ஒரு குறிப்பிட்ட சமூக ஸ்தானத்தில் இருப்பவர், அந்த ஸ்தானத்திற்குப் பொருத்தமாக வினையும், மறுவினையும் ஆற்றுவதற்காகக் அந்த ஸ்தானத்தோடு இணைக்கப்பட்ட சமூக நெறிகளைத்தான் வாகி பாகம் என்றழைக்கின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு தந்தை, தாய் போன்ற ஸ்தானத்திலிருப்பவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதுபோலவே ஒரு சமூகப்பணியாளர் தன் வாடிக்கையாளருடன், கண்காணிப்பாளருடன், பொதுமக்களிடம், சக சமூகப்பணியாளர்களிடம், சமூக எதிர்பார்ப்பிற்கு இணங்க நடக்கப் பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றுவது சமூகப்பணியாளரின் வகிபாகம் எனலாம். உலகில் உள்ள மனிதர்கள் விலங்குகள் மற்றும் பொருட்கள் எல்லாமே ஏதாவதொரு பாத்திரத்தை வகிக்கின்றது. வகிக்கும் பாத்திரத்தையொட்டிய இயல்பான உரிமைகள், கடமைகள் பின்பற்றப்படமுடியாத போதோ அல்லது மீறப்படும் போதோ தனிமனித அளவிலும் சமூக அளவிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

English

1. A culturally determined pattern of behavior that is prescribed for an individual who occupies a specific status. 2. A social norm that is attached to a given social position that dictates reciprocal action. For example, a person who occupies the status of "social worker" is expected by others-that is, clients, supervisors, the profession, the general public, and so on-to behave in the manner generally prescribed for all social workers.