role ambiguity

வகிபாகத் தெளிவின்மை / தடுமாற்றம்

தமிழ் விளக்கம்

role என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பாத்திரமேற்றல் என்று பொருள்படும். ambiguity என்ற சொல்லுக்குத் தடுமாற்றம் என்று பொருள். ஒருவர் வாழ்க்கையில் வகிக்கின்ற பாகம், ஒருவர் ஏற்றுச் செய்கின்ற கடமைகள். ஒருவர் வகிக்கும் பொறுப்பு / பதவிகளில் ஏற்படும் தடுமாற்றத்தை இச்சொல் குறிக்கும். 1. ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் இருப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறித்த கலாச்சார வரையறைகளில், பரிந்துரைகளில் தெளிவின்மை. 2. ஒரு சமூக ஸ்தானத்திற்காக கலாச்சாரம் வரையறுத்துள்ள உரிமைகள், கடமைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் நடத்தை நெறிகளைப் பின்பற்றுவதில் தடுமாற்ற நிலை. 3. ஒரு சமூக ஸ்தானத்தை வகிப்பவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைப்பற்றிய ஸ்திரமாக்கபட்ட எதிர்பார்ப்புக்கள் இல்லாதிருத்தல். 4. ஒரு குறிப்பிட்ட சமூக ஸ்தானத்தில் இருப்பவர், அந்த ஸ்தானத்திற்குப் பொருத்தமாக வினையும், மறுவினையும் ஆற்றுவதற்காகக் அந்த ஸ்தானத்தோடு இணைக்கப்பட்ட நிச்சயமற்ற பல பொருள்தரும் நிலை. எடுத்துக்காட்டாக ஒரு தந்தை, தாய் போன்ற ஸ்தானத்திலிருப்பவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், தந்தை தன்னுடைய பொறுப்புகளை சரிவரச் செய்யாமலிருக்கும் போது, வீட்டிலிருந்து குடும்பத்தைத் தாய்தான் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கலாச்சாரச் சூழ்நிலையில், தாய் வெளியில் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை. அதுபோலவே ஒரு சமூகப்பணியாளரிடம் முதன் முறையாக வரும் வாடிக்கையாளர் சமூகப்பணியாளரிடம் என்ன எதிர்பார்ப்பது என்று திகைக்கும் நிலை போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

English

A situation in which the expectations of a role are unclear or diffuse either to the person enacting it or to the relevant other. For example, a new client goes to a social worker but is not sure what social workers do to help and thus does not know quite what to expect from the meeting.