role boundary
வகிபாக (வகிக்கின்ற பாகம், பாத்திரம்) எல்லைகள், கடமைக்கூற்றின் எல்லைகள்
தமிழ் விளக்கம்
மனிதர்களின் ஒரு கடமைக் கூற்றிலிருந்து இன்னொரு கடமைக்கூற்றை பிரித்தறிய உதவும் எல்லைக்கோடு. சில சமூக ஸ்தானங்களுக்கு வகிபாக அல்லது கடமைக்கூற்றின் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டும், சிலவற்றில் தெளிவற்றதாகவும் இருக்கும் போது, எதிர்பார்ப்புகளில் குழப்பங்களும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இயலாமாலும் போகிறது. எடுத்துக்காட்டாக சமூகப்பணியாளர் தொடர்பான கடமைக் கூற்றில், தொழில்நெறி சார்ந்த தெளிவான எதிர்பார்ப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த எல்லைகளை மீறும் போது, எடுத்துக்காட்டாக எதிர்மறை இடமாற்றீடு ஏற்படும்போது, வாடிக்கையாளரைப் பெற்றோர் சகோதர நிலை சார்ந்தோ, கோபம், ஆத்திரம் கொண்டோ, சிற்றின்ப நாட்டம் கொண்டோ அணுகும் போது, அது சமூகப்பணியாளர் - வாடிக்கையாளர் சிகிச்சை உறவில் தாக்கம் ஏற்படுத்தி சிகிச்சையின் பலனைக் குறைக்கலாம் / தடங்கல் ஏற்படுத்தலாம்.
பார்க்க: enmeshed family - ஒருவரையொருவர் சார்ந்துள்ள குடும்பம் - disengaged family (நெகிழ்வற்ற / ஈடுபாடு நீங்கிய குடும்பம்) Vs enmeshed family ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளில், உறுப்பினர்கள் சுதந்திரமாகச் செயல்படும் திறனை இழப்பதால் வரும் கோளாறுகள் பல.
பார்க்க: enmeshed family - ஒருவரையொருவர் சார்ந்துள்ள குடும்பம் - disengaged family (நெகிழ்வற்ற / ஈடுபாடு நீங்கிய குடும்பம்) Vs enmeshed family ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளில், உறுப்பினர்கள் சுதந்திரமாகச் செயல்படும் திறனை இழப்பதால் வரும் கோளாறுகள் பல.
English
The dividing line that distinguishes one's role from all other roles. For example, there are specific and normative expectations of one who occupies the status of social worker, and the worker who meets those expectations but does not go beyond them is behaving within the boundary. But workers who develop dual relationships with clients go beyond the professional boundary. Role boundaries are most commonly violated in situations of role ambiguity, often resulting in problems of role conflict or role discomplementarity. See also enmeshed family.