role conflict

வகிபாக முரண்பாடு

தமிழ் விளக்கம்

ஒன்றிற்கு மேற்பட்ட (வாழ்க்கைப்) பொறுப்புகளை வகிப்பவர்கள், ஒன்றிற்கு ஒன்று முரண்படும் செயல்களைச் செய்யும்படியாகவோ அல்லது அவர் ஒன்றிற்கு மேற்பட்ட பொறுப்புகளை எடுத்துச் செய்யவேண்டும் என்று பிறர் எதிர்பார்க்கும் நிலையை வகிபாக முரண்பாடு எனலாம். எடுத்துக்காட்டாக சமூகப்பணியாளர் தன்னுடைய தேவைகளையோ / பிரச்சனைகளையோ கேட்டறிய எந்நேரமும் அணுக்கத்தக்க வகையில் இருக்கவேண்டும் என்று வாடிக்கையாளர் எதிர்பார்ப்பிற்கு மாறாக, சமூகப்பணியாளரின் மேற்பார்வையாளரோ, ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் வாடிக்கையாளரைச் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நிலை. இது ஒரு கடமையைப் பற்றிய இருசாராரின் முரண்பட்ட எதிர்பார்ப்புகளைக் குறிக்கும்.

English

The experience of one who occupies two or more social positions that carry incompatible expectations. For example, a social worker may be expected by the client to be immediately available during times of crisis but is expected by the supervisor to see clients only according to a predetermined schedule.