role discomplementarity
பூர்திசெய்யப்படாத கடமையாற்றல், வகிபாக நிறைவின்மை
தமிழ் விளக்கம்
ஒருவர் வகிக்கும் சமூக ஸ்தானத்திற்கு அல்லது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு ஏற்றவாரோ அல்லது பிறரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாரோ நடந்து கொள்ள இயலாமை. எதிர்பார்ப்புகளுக்கு இணங்க கடமையை நிறைவேற்ற முடியாமையோ அல்லது கொடுக்கப்பட்ட கடமைகளை முழுமையாக நிறைவேற்றமுடியாத போதோ, வகிபாக (வகிக்கின்ற பாத்திரம்) நிறைவின்மை உருவாகிறது. இது ஐந்து காரணங்களால் ஏற்படுவதாக சமூகவியலார் கருதுகின்றனர். 1. புரிதிறன் குறைபாடு / முரண்பாடு. (cognitive discrepancy). ஒருவருக்கு தான் செய்யவிருக்கும் கடமைகளைப் பற்றியோ அல்லது அவரால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி மற்றவர்களுக்கு ஏற்படும் புரிதல் குறைபாடு. (எடுத்துக்காட்டாக சமூகப்பணியாளருக்கும், அவரிடம் வரும் வாடிக்கையாளருக்கும் பரஸ்பரம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய தெளிவின்மை) 2. ஒருவர் வகிக்கும் ஸ்தானத்தைப் பற்றிய புரிதலின்மை (status discrepancy). ஒருவர் வகிக்கும் ஸ்தானத்தைப் புரிந்துகொள்ளாமல் அவரிடமிருந்து அதிகமாக எதிர்பார்ப்பது. (எடுத்துக்காட்டாக சமுதாய அமைப்பாளராகப் பணியாற்றும் சமூகப்பணியாளரிடம் மனச்சிதைவு நோய் பற்றிய தகவல்களை எதிர்பார்ப்பது). 3. ஒதுக்கீடு புரிதலின்மை (allocative discrepancy) பிறர் செய்யக்கூடிய கடமைகளை பிறரின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப பூர்த்தி செய்ய முடிந்தாலும், தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை மட்டும் செய்வது (எடுத்துக்காட்டாக ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உளவளச் சேவை அளிக்கவேண்டும் என்று சமூகப்பணியாளரிடம் வேண்டிக்கொண்டாலும், வாடிக்கையாளருக்கு மட்டுமே சேவை அளிக்கமுடியும் என்ற நிலைப்பாட்டை எடுப்பது) 4. மதிப்பீடுகளில் புரிதலின்மை / முரண்பாடு (discrepancy of value orientations) ஒருவருடைய மதிப்பீடுகளோடு முரண்பாடுவது அல்லது புரியாமல் இருப்பது (எடுத்துக்காட்டாக விவாகரத்து கோரும் பெண் வாடிக்கையாளரை அவரின் கணவருடன் சேர்த்துவைக்க முயலும் சமூகப்பணியாளர்) 5. செய்தொழில் தெரியாமை (absence of instrumental means) எந்த முரண்பாடுகளும் இல்லாமலிருந்தும், பரஸ்பரப் புரிதல் இருந்தும், ஒரு கடமையை எடுத்துச் செய்ய நேரமோ, திறமையோ இல்லாதிருத்தல் (எடுத்துக்காட்டாக சமூகப்பணியாளர் தன்னுடைய வாடிக்கையாளருக்கு அதிகப் பொருளுதவிக்காக சம்பந்தப்பட்ட துறையில் கோரிக்கை வைத்தாலும், நிதிப் பற்றாக்குறையால் அவருடைய கோரிக்கை தள்ளுபடியாதல்).
English
The condition that exists when an individual's various roles are inconsistent with one another or with the expectations held by a relevant other. For example, the client and the supervisor have certain expectations of the social worker but have not made clear what those expectations are, so they cannot be fulfilled. Social scientists identify five conditions in which role discomplementarity occurs: (1) cognitive discrepancy, which is based on a lack of knowledge of what the appropriate expectations are (for example, the social worker or client does not know what the other expects and thus cannot fulfill those expectations); (2) status discrepancy, in which one person expects another to fulfill expectations that are inappropriate to that person's social position (for example, the client expects the social worker to provide medical information); (3) allocative discrepancy, in which one person does not choose to accept responsibility for fulfilling the other's expectations even though he or she is capable of doing so (for example, the client wants the social worker to treat the whole family, and the worker wants to work only with the individual); (4) discrepancy of value orientations, in which those who have expectations of one another have incompatible values (for example, the client expects the social worker to help her end her marriage, and the worker expects to help save the marriage); and (5) absence of instrumental means, in which the reciprocal expectations are compatible but the people lack the tools necessary to carry them out (for example, the client and social worker both want the welfare department to increase the financial supports to the family, but there is not enough money to do this).