role model
முன்மாதிரி
தமிழ் விளக்கம்
தங்களுடைய நடத்தையாலும், அடைந்த வெற்றிகளாலும், ஆளுமையாலும், அடுத்தவர்கள் பின்பற்றத்தக்க அளவு நடந்துகொள்பவர். இதைச் சமூகவியலில் முதன் முறையாக ராபர்ட் மெர்டன் (Robert K. Merton) என்ற சமூகவியலார் பயன்படுத்தினார். இது அடையாள உளவியல் மற்றும் அடையாளம் கரைதல் (identity psychology & role engulfment) மற்றும் ஒப்பீட்டுக்குழு அடையாளக் கருத்தாக்கத்துடனும் தொடர்புடையது. முன்மாதிரிகளில் பலவகையுண்டு. புகழ்ந்து தெய்வ நிலைக்கு உயர்ந்தவர் (apotheosis), சிறப்பிற்கோர் எடுத்துக் காட்டு (paragon), புதிய திசைகளை / வாய்ப்புகளை உருவாக்கியவர், (trend setter), தங்களுடைய பணியில் உச்சத்தை தொட்டவர் (crackerjack) என்று பலவகைப்படுவர்.
பார்க்க; reference group - ஒப்பீட்டுக் குழு, அடையாளக்குழு - தனிமனிதர்கள் மற்றும் குழுக்களின் கருத்துக்கள், நம்பிக்கைகள், மனோபாவங்கள் மற்றும் நடத்தைகள் மீது செல்வாக்கு செலுத்தும் அல்லது முன்னுதாரணமாக கருதப்படும் தனிமனிதர்கள் மற்றும் குழுக்களை ஒப்பீட்டுக்குழுக்கள், அடையாளக் குழுக்கள் எனலாம். இதில் அடையாளக் குழுக்கள் என்பன (normative reference group) ஒழுங்குமுறை சார்ந்த முன்னுதாரணர்கள். எ.கா பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள். ஒப்பீட்டுக்குழுக்கள் (comparative reference groups) என்பன பிறரின் தரத்தோடு ஒப்பீடு செய்துகொள்ள உதவும் குழுக்கள்.

English
One whose conduct, accomplishments, personality, or social position serves as a standard for emulation by others. The standard may be socially beneficial (for example, a basketball star who shows young people how to avoid drugs) or not (for example, a wealthy and charismatic figure who is a crime boss).