role playing

வகிபாக ஒத்திகை

தமிழ் விளக்கம்

1 நிகழவிருக்கும் ஒரு சம்பவத்திற்கு எப்படி வினையாற்றுவது என்பதைப்பற்றிய ஒத்திகை பார்த்தல். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவோ அல்லது ஒரு குறிக்கோளை அடையவோ எப்படி நடந்துகொள்வது என்று ஒத்திகை பார்த்தல். ஒரு சமூகச் சூழலில் பிறருடைய மனோபாவம், நடத்தை, பேச்சு போன்றவற்றை பாவனை செய்து நடித்து ஒத்திகை பார்த்து, அதிலுள்ள சாதக பாதகங்களின் கருத்தறிதல். இது ஜெ.எல் மொரீனோ (J. L. Moreno) என்ற உளவியலாளரால் உளநாடகம் என்ற முறையில் பிரேரிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சை முறைகளில், குறிப்பாக குழுச் சிகிச்சை முறைகளில் பின்பாற்றப்படுகிறது
பார்க்க: demonstration - ஒரு பிரச்சனையை நடைமுறையில் எப்படித் தீர்க்கலாம் என்று செய்து காட்டுதல் அல்லது செயல்விளக்கம் அளிப்பது. சமூகப்பணியாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள், பிறரிடம் எவ்வாறு பேச வேண்டும் / பழகவேண்டும் என்பதை நடித்துக் காட்டல்.
எப்படி நடந்து கொள்வது என்பதற்கான ஒத்திகை - பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும், அதைத் தீர்க்கவும் நடத்தையியல் கோட்பாட்டைத் தங்கள் அணுகுமுறையாகப் பின்பற்றும் சமூகப்பணியாளர்களும், மனித சேவையில் ஈடுபடும் பிற திறத்தொழிலினரும் (professionals), தங்கள் வாடிக்கையாளர்களிடம் எந்தெந்த மாதிரியான நடத்தைகள் விரும்பத்தக்கது என்பதை விளக்கி, அந்த நடத்தையைச் சித்தரித்து, பாவனை செய்யச் சொல்லியும் (role playing), அதைக் காட்சிக்குரியதாக்கியும், (demonstration) உற்சாகப்படுத்துவர். அதை ஒரு பாதுகாப்பான அலுவலகச் சூழலில் மீண்டும் மீண்டும் செய்துகாட்டி, உரிய திருத்தங்கள் செய்யச் செய்ய, அதுவே பொருத்தமான நேரத்தில் விருப்பமான நடத்தையாக வெளிப்படும் என்ற அனுமானதின் அடிப்படையில் அமைந்தது.

English

1. A rehearsal of behaviors that can be useful in a subsequent situation to fulfill some expectation or achieve some goal. 2. A re-experiencing of the past as one imagines being another person (a parent, a sibling, and so on); a technique to elicit self-awareness and understanding of others. Social workers often help their clients rehearse for real situations. For example, a social worker asks a client to pretend she is going to ask her boss for a raise to make it easier for the client to actually confront her boss. Role playing is a technique developed in the 1920s by J. L. Moreno in his psychodrama method of therapy and is now used in various group work, social group work, teaching, group therapy systems, game analysis, and leadership training programs to help individuals test certain behaviors and receive immediate feedback about approaches to the situation.