role re-equilibration

வகிபாக மறுசமநிலையாக்கல்

தமிழ் விளக்கம்

இருவரோ அல்லது இருவருக்கு மேற்பட்டவர்களோ வகிக்கும் பாத்திரங்களில் அல்லது கடமைகளில் முரண்பாடு ஏற்பட்டாலோ அல்லது அக்கடமைகள் முழு நிறைவடையமுடியாத நிலை ஏற்பட்டாலோ, ஒருவருக்கொருவர் அதைப்பற்றி விவாதித்து, தெளிவுக்கு வந்து எதிர்பார்ப்புகளை சமநிலைப்படுத்திக்கொள்ளல்.
பார்க்க: role discomplementarity - பூர்திசெய்யப்படாத கடமையாற்றல், வகிபாக நிறைவின்மை - ஒருவர் வகிக்கும் சமூக ஸ்தானத்திற்கு அல்லது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு ஏற்றவாரோ அல்லது பிறரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாரோ நடந்து கொள்ள இயலாமை. எதிர்பார்ப்புகளுக்கு இணங்க கடமையை நிறைவேற்ற முடியாமையோ அல்லது கொடுக்கப்பட்ட கடமைகளை முழுமையாக நிறைவேற்றமுடியாதா போதோ, வகிபாக (வகிக்கின்ற பாத்திரம்) நிறைவின்மை உருவாகிறது. இது ஐந்து காரணங்களால் ஏற்படுவதாக சமூகவியலார் கருதுகின்றனர். 1. புரிதிறன் குறைபாடு / முரண்பாடு. (cognitive discrepancy) ஒருவருக்கு தான் செய்யவிருக்கும் கடமைகளைப் பற்றியோ அல்லது அவரால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி மற்றவர்களுக்கு ஏற்படும் புரிதல் குறைபாடு. (எடுத்துக்காட்டாக சமூகப்பணியாளருக்கும், அவரிடம் வரும் வாடிக்கையாளருக்கும் பரஸ்பரம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய தெளிவின்மை) 2. ஒருவர் வகிக்கும் ஸ்தானத்தைப் பற்றிய புரிதலின்மை (status discrepancy).

English

The process that takes place between two or more people to end role conflict or role discomplementarity. Usually this is achieved by clarifying mutual expectations.