role vigor
வகிபாக ஆற்றல், வகிபாக வீரியம், வகிபாக விறுவிறுப்பு
தமிழ் விளக்கம்
ஒருவர் வகிக்கும் (சமூக) ஸ்தானப் பொறுப்புகளிலிருந்து, அவரிடமிருந்து பிறர் எதிர்பார்க்கும் பொறுப்புகளிலிருந்து அவர் விலகிச் செல்ல கலாச்சாரம் அனுமதிக்கும் நிலை. உயிரோட்டமுள்ள கலாச்சாரங்களில் இந்த விலகல் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக சிறிய நகரங்களை விட பெரிய நகர்புறங்களில் பெண்கள் தங்களுக்கான பாரம்பரியப் பொறுப்புகளோடு, பலவிதமான புதுப் பொறுப்புகளில் ஈடுபடுவதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் நிலை.
English
The relative degree of deviation from a role's expectations permitted by the culture. For example, more role vigor is permitted for women in large, pluralistic urban areas than in small towns.