Rorschach test
ரோர்ஸ்காச்சின் சோதனை, மைத்தடச் சோதனை, மையோற்றுச்சோதனை
தமிழ் விளக்கம்
மைக் கறையிலிருந்து, மை உண்டாக்கும் தடங்களிலிருந்து உளப்பகுப்பாய்வு முறையை பயன்படுத்தி ஒரு நபரின் ஆளுமையை மதிப்பிட உபயோகப்படுத்தபட்ட சோதனை முறை. சுவிட்சர்லாந்து மன நோய் மருத்துவரான ஹெர்மன் ரோசார்ச் (Hermann Rorschach) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் (1921) அவருடைய பெயரிலே ரோசார்ச் டெஸ்ட் என்றழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டாலும், இப்பொழுது இச்சோதனை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
English
A projective test, designed in 1921 by Swiss psychiatrist Hermann Rorschach (1884-1922), in which clients are given a series of 10 standardized inkblots and asked to report what they see. Responses can indicate personality traits, interests, thought processes, and so forth.