Rothman, Beulah (1924-1990)
ராத்மேன், புயூலா (1924-1990)
தமிழ் விளக்கம்
ராத்மேன், புயூலா (1924-1990) - அமெரிக்க நாடறிந்த சமூகப்பணிக் கல்வியாளர். குழுக்கள் மூலமான சமூகப்பணியை மேம்படுத்துவதற்கான சங்கம், (குழுக்களுடனான (Group Work) சமூகப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைப்பு Association for the Advancement of Social Work with Groups (AASWG) உருவாவதற்குக் காரணமாயிருந்தவர். இது பின்னாளில் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்துடன் இணைந்தது. சமூகக் குழுப்பணி முறையையும், கருத்தாக்கத்தையும் முறைப்படுத்த, வகைப்படுத்த உதவியவர். சமூகக் குழுப்பணிக்கான சஞ்சிகை (Journal of Social Work with Groups), சமூகப்பணி கற்பித்தலுக்கான சஞ்சிகை (Journal of Teaching in Social Work) போன்ற இதழ்கள் வெளிவரக் காரணமாயிருந்தவர். இவர் அடெல்பி பல்கலைக் கழகத்தின் சமூகப்பணிக் கல்விப்புலத் (Dean) தலைவியாகவும், பல்வேறு சமூகப்பணிக் கல்லூரிகளில் ஆலோசகராகவும் இருந்தார்.
English
One of social work's major conceptualizers and systematizers of social work with groups, she was also a prominent educator and administrator. She helped found several group work organizations, including the Association for the Advancement of Social Work with Groups (AASWG), and was a founding editor of the journals Social Work with Groups and the Journal of Teaching in Social Work.