RU-486

ரூ 486

தமிழ் விளக்கம்

பெண்ணின் சூல் முட்டையும் ஆணின் விந்தும் இணைந்து உருவாகும் கரு, கருப்பை சுவற்றில் ஒட்டிக் கருவாக வளரவேண்டும். கருப்பை சுவற்றில் கரு ஒட்டிக்கொள்ள progesterone எனும் சினையியக்குநீர் அல்லது சினைப்பட்ட விலங்கில் உருவாகும் இயக்குநீர் உதவுகிறது. சினை இயக்குநீர் சுரக்காமல் தடுக்கும் போது, கரு கருப்பை சுவற்றில் ஒட்டிக்கொள்ளமுடியாமல் உதிரப்போக்கோடு வெளியேறிவிடும். இது மிக எளிதான, அதிகப் பக்கவிளைவுகளற்ற அவசர காலக் கருத்தடை முறை. இதை உடலுறவுக்கு பின்னாலான கருத்தடை (post-coital contraception) எனவும் கூறுவர். Morning after pill எனவும் சொல்லப்படுவதுண்டு. உடலுறவு கொண்ட ஓரிரு நாட்களுக்குள் கருத் தங்காமல் இருப்பதற்காக செய்யப்படும் கருத்தடை முறை இதுவாகும். கரு தங்குவதைத் தடுப்பதற்கான எத்தகைய கருத்தடை முறையையும் உபயோகித்து வராத பெண் ஒருத்தி, எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள நேர்ந்தால் கரு தங்காமல் தடுப்பதற்கானது. இது கருக்கலைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பற்ற உடல் உறவின்போதோ, கருத்தடை முறை தவறிவிட்டாலோ, (மாத்திரை போடாமை, ஆணுறை அணியாமை போன்றவை), அல்லது ஒழுங்கான முறையில் உபயோகிக்காமையாலோ, விரும்பாத உறவு அதாவது வல்லுறவுக்கு ஆட்படும்போதோ இந்த மாத்திரை பலனளிக்கும். இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டுவரும் மாலா டி, இந்த வகையில் குறைந்த வீரியம் உள்ள பாதுகாப்பான கருத்தடை மருந்தாகும். இது மைப்பிரிஸ்டோன் (Mifepristone) என்ற வணிகப் பெயரில் விற்கப்படுகிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிறுவனம் இதை அங்கீகரித்திருந்தாலும், அமெரிக்காவின் கருத்தடை எதிர்ப்பாளர்களால் அங்கு விற்பனை செய்யப்படாமல் பிற நாடுகளில் விற்கப்படுகிறது.

English

Mifepristone, a drug that in- duces abortion, if taken within seven weeks of conception, by impeding the progester- one hormone, which is necessary for the fetus to stay implanted in the uterus. It has been available since the 1980s and is widely used in Europe and Asia. Although approved by the U.S. Food and Drug Administration (FDA) in September 1996, the drug is not generally available in the United States due to the reluctance of pharmaceutical companies to produce or distribute it. The drug has been the focus of attacks by antiabortion groups because it makes abortion more easily available, cheaper, safer, and more private than currently available surgical methods.