rubber-fence concept
ரப்பர் வேலி கருத்தாக்கம்
தமிழ் விளக்கம்
குடும்பச் சிகிச்சை முறையில், சில குடும்பங்கள் குடும்பத்திற்குள்ளும், வெளியாரிடத்திலும் எப்படி நெகிழ்வான எல்லைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகின்றன என்பதை உருவகப்படுத்த லைமன் வெய்ன் (Lyman Wynne) என்ற உளப்பிணி மருத்துவர் பயன்படுத்திய சொல்லாடல். ஒரு குடும்பம் நல்ல விஷயம் என்று ஒன்றை நம்பும்போது, அதை உள்வாங்க, தன் எல்லைகளை விரித்துக்கொள்வதும், அச்சுறுத்தும் விசயங்களில் தன் எல்லைகளை சுருக்கிக் கொள்வதுமான நிலை. எடுத்துக்காட்டாக ஒரு சமூகப்பணியாளர் சொல்லும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, அதைக் குடும்பச் செயல்பாட்டில் பின்பற்றுவதாகச் சொல்லும் குடும்பங்கள், சில காலம் கழிந்த பின்னர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவது.
English
A metaphor used in family therapy to describe how some families maintain boundaries between themselves and others. A boundary may seem to stretch to incorporate what is seen as positive and to contract when apparently threatened. For example, if a social worker makes suggestions to such a family, the members might appear to expand in incorporating the new ideas into the family dynamics but would later contract to their original configuration.