rubella
தட்டம்மை, சின்னமுத்து அல்லது மணல்வாரி அம்மை
தமிழ் விளக்கம்
தட்டம்மை, சின்னமுத்து அல்லது மணல்வாரி அம்மை (Measles,morbilli ) என்று அறியப்படும் இந்த நோய் பாராமைக்சோ வைரசு குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி வைரசால் (தீநுண்மத்தால்) ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும். நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூக்கொழுகல், சிவந்த கண்கள் ஏற்படுவதுடன் பொதுவான நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும். கண் சிவத்தலும் ஒளிக் கூச்சமும் இருக்கும். குறைந்த அளவு காய்ச்சலில் இருந்து அதிகக் காய்ச்சல் வரை (உச்சம் 40.6C (105F) பல நாட்கள் தொடரும். பின் குறைந்து, கொப்புளம் தோன்றும்போது மீண்டும் வரும். தட்டம்மை நோய்த்தொற்று உள்ளவரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் நீருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகொள்ளும்போது இந்நோய் தொற்றும். தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும், நோய் வடிந்த பிறகு நான்கு நாட்கள் வரையும், நோயுற்றவரிடமிருந்த பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது. விரைவாகப் பரவக்கூடிய இந்த வைரஸ் நோயுற்றவருடன் வாழும் இடத்தைப் பகிரும் 90% நபர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. தட்டம்மை தொற்றியவருக்கு முதல் தொடர்பிலிருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அறிகுறியில்லா அடைவுக்காலமாக இருக்கிறது. ஜெர்மானியத் தட்டம்மை என்பது இதனையொட்டிய அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும் இரு நோய்களும் வெவ்வேறானவை. சத்துக்குறைவு உள்ள இளம் குழந்தைகள் இந்த நோயால் இறக்க நேரிடலாம். பாதுகாப்பான, பலனளிக்கக்கூடிய தடுப்பு மருந்து இருந்தும், குழந்தைச் சாவுக்கு இது ஒரு முக்கியக் காரணமாக விளங்குகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை உரிய காலத்தில் போடுவதுடன் சுகாதார பழக்க வழக்கங்களை கையாளுதலால் சிசு மரணங்களைத் தவிர்க்கலாம். இந்தியாவில் இந்த நோயால் 47% சிறார்கள் மரணமடைவதாக ஆய்வுக் கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எம்.ஆர். (MMR) என்று சொல்லப்படும் முத்தடுப்பு (தட்டம்மை, அம்மைக்கட்டு, ரூபெல்லா) ஊசியால் மணல் வாரி, பொன்னுக்கு வீங்கி முதலிய அம்மைகள் வராமல் தடுக்கலாம். வழக்கமான தடுப்பு மருந்து, தட்டம்மையை வெற்றிகரமாகத் தடுக்கிறது. 12-15 மாதத்தில் முதல் முறையாகவும், 4 வாரங்கள் கழித்து அடுத்த தவணை மருந்தும் அளிக்க வேண்டும். 4-6 வயது வரை தடுப்பு மருந்து அளிக்கலாம். எனினும், இந்திய தேசிய தடுப்புமருந்து அட்டவணை, முதலில் 9-15 மாதங்களிலும், இரண்டாவது தவணை 16-24 மாதங்களில் DPT-யுடன் (டிப்தீரியா, பெர்ட்டியூசிஸ், டெட்டானஸ்) இணைத்தும் (ஊக்க அளவு booster dose) கொடுக்க வேண்டும்” என்று கூறுகிறது. இது 5 வயது வரை கொடுக்கப்படலாம்.
English
A short-term, mild form of measles, also called German measles or three-day measles. Although rarely fatal to children or adults, this disease is particularly dangerous to the fetus of an infected pregnant woman and can result in miscarriage or a variety of congenital conditions.