rugged individualism
முரட்டுத்தனமான தனிநபர்வாதம், வளைந்துகொடுக்காத தனியாள் வாதம்
தமிழ் விளக்கம்
மக்களில் ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த முயற்சியிலே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்று கூறும் கருத்தாக்கம். இது தனிமனிதச் சுதந்திரத்தையும், சுய சார்பையும், சந்தைப் பொருளாதாரத்தையும் முன்னிறுத்திய பொருளாதார மற்றும் அரசியல் கருத்தாக்கம். அமெரிக்காவில் ஹெர்பெர்ட் ஹூவர் ஜனாதிபதியாக இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறை. அரசின் சமூகநலத் திட்டங்கள், முன்னேற வேண்டுமென்ற முயற்சியை நீர்த்துப் போகச் செய்யுமாதலால், அரசு உதவிகளைப் பெருமளவு குறைக்க வேண்டுமென்று வாதிட்ட கருத்து.
English
The ideology espoused by certain economists, politicians, and others that people should be left to their own initiative in providing for their needs. According to this view, even though difficulties might be experienced, it strengthens a person's character and capacity to cope more effectively with any other problems that might be faced in the future.