rumination disorder
அசைபோடும் கோளாறு
தமிழ் விளக்கம்
ruminants என்றால் அசை போடும் விலங்குகளைக் குறிக்கும். rumination என்றால் உண்ட உணவை வாய்க்குக் கொணரும், எதிர்க்கழிக்கும், எதிர்க்களிக்கும் நிலை எனலாம். மனிதர்கள் அசைபோடும் உயிர்வகையைச் சேர்ந்தவர்கள் அல்ல. எதிர்க்களித்தல் பெரும்பாலும் வாந்தியில் முடியும். இந்தக் கோளாறு உள்ள குழந்தைகள் உண்ட உணவை வாந்தியாக வெளித் தள்ளிவிடுவதால், அவர்கள் உண்ணுவதற்கேற்ப உடல் எடை அதிகரிக்காமல், ஊட்டச் சத்து குறைந்து சிரமத்திற்குள்ளாவார்கள். 2. ஏதாவதொரு எண்ணத்தை மீண்டும் மீண்டும் சிந்தித்துக்கொண்டே, அசைபோட்டுக்கொண்டே இருக்கும் சிந்தனைக் கோளாறைக் குறிக்கவும் இவ்வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.
English
One of the eating disorders in some infants and young children, characterized by repeated regurgitation, in which the infant loses weight or fails to gain weight and may develop nutritional deficiencies. The cause of this condition is not understood, but it is not the result of gastrointestinal illness or nausea.