rural social work

கிராமப்புற சமூகப்பணி

தமிழ் விளக்கம்

விவசாயம் சார்ந்த, பெருநகரங்களில்லாத, மக்கள் அடர்த்தியற்ற, சிறுநகரங்களில் வாழும் மக்களுக்கு ஏற்படும் பிரத்யேகப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சமூகப்பணி. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் இது கிராம மேம்பாட்டுப் பணி என்றழைக்கப்படுகிறது. நகர்ப்புறத்தில் வாழும் மக்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் இவர்களுக்கிருந்தாலும், குறைவான கட்டமைப்பு வசதிகள், போதிய மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் இல்லாமை, குறைவான பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் சில சமூகப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடமுடியாத இறுக்கமான சூழ்நிலையால், அவர்களின் தன்னுதவித் திறன் பாதிக்கப்படுவதால், இவர்களுடைய சூழ்நிலைக்குப் பொருத்தமான சேவைகளை சமூகப்பணியாளர்கள் வழங்குகிறார்கள்.

English

Social work practice oriented to helping people who have unique problems and needs arising out of living in agricultural, nonmetropolitan, or sparsely populated areas or small towns. These people face many of the same problems and needs as do urban clients; in addition, however, they often encounter difficulties because of limited services and resource systems, less acceptance of any variations from the social norms prevalent in the area, and fewer educational and economic opportunities.