rural social workers
கிராமப்புற சமூகப்பணியாளர்கள்
தமிழ் விளக்கம்
பெருநகரங்களில் வசிக்காத, ஜன அடர்த்தியற்ற சிறுநகரங்களிலும், கிராமப்புறங்களிலும், வேளாண்மை மற்றும் கால்நடை சார்ந்த வருமானமீட்டலில் ஈடுபட்டுள்ள மக்களுக்குப் பணிபுரியும் சமூகப்பணியாளர்கள். இவர்கள் போதுமான வசதிகளற்ற, தனித்திருக்கும் குடியிருப்புகளில், குறைந்த ஆதாரங்களைக் கொண்டு ஆக்கபூர்வமாகச் செயல்படவேண்டும். இச் சமூகப்பணியாளர்கள் பல்திறன் கொண்டவர்களாகவும், சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் தெளிவு கொண்டவர்களாகவும் இருப்பது அவசியம்.
English
Professional social workers whose predominant clientele and practice activities are in sparsely populated regions. The most successful workers in these settings are well-trained, creative professionals who can work in relative isolation with limited additional resources.