Russell Sage Foundation
ரஸ்ஸல் சேஜ் அறக்கட்டளை
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் தொழிலதிபரும், தனவந்தருமான சேஜ் அவர்களின் நினைவாக, அவருடைய விதவை மனைவி மார்க்ரெட் ஸ்லோகம் சேஜ் (Margret Slocum Sage 1816 - 1918) அவர்களால் 1907 ஆம் ஆண்டு, சரியான சமூகவியல் ஆய்வுகளின் மூலமும், அந்த ஆய்வுகளைப் பிரசுரிப்பதன் மூலமும், அமெரிக்க மக்களின் மேம்பாட்டிற்காக முயலுவதைக் குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை. சமூக ஆய்வையும், பிரசுரித்தலையும் பிரதான நோக்கமாகக் கொண்ட ரஸ்ஸல் சேஜ் அறக்கட்டளை, அமெரிக்கக் கலாச்சாரம், புலம்பெயர்ந்தவர்கள், அமெரிக்கத் தொழிலாளர்களின் எதிர்காலம், சமூக சமத்துவமின்மை, பொருளாதார நடத்தை போன்ற தலைப்புகளில் திருப்புமுனையாகக் கருதத்தக்க குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளையும், பிரசுரங்களையும் செய்துள்ளன. சமூக நலக்கொள்கைகள் பற்றி இந்த அறக்கட்டளை செய்த ஆய்வுகளும், பிரசுரங்கங்களும் சமூகப்பணி ஒரு திறத்தொழிலாக உருவாக பெரிய அளவில் உதவியது. சமூகப்பணி தொடர்பான முக்கிய இலக்கியங்கள் இந்த அறக்கட்டளையால் பிரசுரிக்கப்பட்டது. .
பார்க்க: DeForest, Robert Weeks - டீ பாரஸ்ட், ராபர்ட் வீக்ஸ் (1848–1931) - தயாள குணம் கொண்டவர். சமூக சீர்திருத்தவாதி. உலகின் முதல் சமூகப் பணிக் கல்லூரியை (நியூயார்க் அறப்பணிப் பள்ளி New York School of Philanthropy - தற்போது கொலம்பியா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட சமூகப் பணிக் கல்லூரி) உருவாக்கக் காரணமாயிருந்தவர். ரஸ்ஸல் சேஜ் என்ற அறநிறுவனத்தின் ஸ்தாபகர். ஏழைகளின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர்.

English
A philanthropic organization, founded in 1907 by Margret Slocum Sage (1816- 1918), the widow of entrepreneur Russell Sage, for the improvement of social and living conditions in the United States. The foundation's financing of systematic research in social service programs and of the development of social agencies contributed significantly to the professionalization of social work. Information made available through the foundation was used in the training of friendly visitors.