Ryan White Comprehensive AIDS Resources Emergency Act of 1990

விரிவான எய்ட்ஸ் நோய் உதவிக்கான ரயான் ஒயிட் அவசரச் சட்டம். 1990

தமிழ் விளக்கம்

பரம்பரை இரத்த ஒழுக்கு நோயால் பாதிக்கப்பட்ட ரயான் ஒயிட் என்ற 13 வயதுப் பள்ளி மாணவனுக்கு எய்ட்ஸ் தொற்றிய இரத்தம் ஏற்றியதால் எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்ள, அவனது பள்ளிநிர்வாகம் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டது. எய்ட்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காலத்தில், ரயானும் அவரது தாயும் அதை எதிர்த்துப் போராடினர். அவர்களின் போராட்டம் அமெரிக்க மக்களின் மனச் சாட்சியை உலுக்க, எய்ட்ஸ் நோய் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல, அது ஒரு குற்றமும் செய்யாதவர்களையும் பாதிக்கும் என்று புரிய ஆரம்பித்தது. ரயான் தன்னுடைய 18 வயதில் 1990 இறக்க, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் முன்வந்தது. அதன் விளைவாக அமுலுக்கு வந்ததே விரிவான எய்ட்ஸ் நோய் உதவிக்கான ரயான் ஒயிட் அவசரச் சட்டம். இந்தச் சட்டம் எய்ட்ஸ் நோய்த் தொற்றைத் தடுக்கவும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும், பிற சேவைகளும் வழங்க அமெரிக்க மைய அரசு பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்ய வழிவகுத்தது.

English

The federal legislation (P.L. 101-381, Ryan White CARE Act) named for the young AIDS victim that provides federal funds to cities and states for planning, implementing, and evaluating programs to prevent transmission of human immunodeficiency virus (HIV) and to improve the quality and availability of health care social services for people affected by HIV and acquired immune deficiency syndrome (AIDS).