sabbatical

ஓய்வினை, ஓய்வு கொள்கிற, ஓய்வு தருகிற, வார ஓய்வுத் திருநாளிற்குரிய, வார ஓய்வுநாளிற்குப் பொருத்தமான, ஓய்வுக் கொண்டாட்ட நாள் போன்ற.

தமிழ் விளக்கம்

ஒரு வாரத்தின் ஏழாவது நாளில் ஓய்வு எடுக்கும் பொருளைத் தரக்கூடிய கிரேக்கச் சொல்லான Sabatikos என்ற சொல்லின் ஆங்கில வடிவம். கல்வி நிலையங்களும், ஆய்வு நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் ஏழுவருடங்கள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்த, கல்வியாளர்களுக்கும், பிற திறத்தொழிலினருக்கும் அவர்களுக்கு விருப்பமான ஆய்விலோ, புத்தகம் எழுதவோ, பயணம் மேற்கொண்டு புத்துணர்ச்சி பெறவோ, தங்கள் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் நடைமுறையைக் குறித்தாலும், ஒருவருடைய தொடர் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, ஒருவருக்கு விருப்பமான வினையாற்றுவதையோ அல்லது உல்லாசமாக இருப்பதையோ இது குறிக்கும்.

English

A period of paid leave, usually granted to some academics or other professionals, to achieve rejuvenation, conduct research, or experience new lifestyles. Qualified professors with tenure in many universities may be granted one year of leave after each seven years of service.