sabotage
அழிவுச் செயல், அழிசெயல், கெடுவினை, வேண்டுமென்றே அழித்தல், அழிவுவேலை, தீய நோக்கோடு ஒரு முயற்சியைச் சிதைத்தல், நாசவேலை, அழிவுப்பணி, பயனற்றதாக்குதல், மற்றவர் சொத்துக்களை அழித்தல், சதித் திட்டம், நாசம் விளைவித்தல்
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட குறிக்கோளை அடைவதற்காக அரசுக்கு, நிறுவனங்களுக்கு அல்லது நடைமுறைகளுக்கு குந்தகம் விளைவிக்கவோ, இடையூறு செய்யவோ திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயல். இது ஒரு பணியாளர் தன்னுடைய முழுத்திறனையும் பயன்படுத்தாது, வேலையைத் தாமதம் செய்யும் செயலாகவோ, மனிதர்களைப் பற்றியோ, பொருட்களைப் பற்றியோ அல்லது நிகழ்ச்சிகளைப் பற்றிய வதந்திகளாகவோ, உயிருக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படும்படியான தீங்கிழைக்கும் செயலாகவோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவோ, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டிப் பணியயவைப்பதைக் குறிக்கோளாகவோ இருக்கலாம். இது மாதிரியான கெடுவினைகள் சட்டத்திற்குப் புறம்பானாதாகவும், அதன் விளைவுகள் தீங்கிழைப்பதாகவும் இருப்பதால், இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தங்களின் அடையாளத்தை வெளிக்காட்டமாட்டார்கள்.
பார்க்க: ecostage - சுற்றுச் சூழலைப் பாதிக்கும் நாசவேலைகள், சுற்றுச் சூழலைப் பாதிக்கும் நபர்களின் நடத்தையை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்து தடைசெய்தல்.
Insurgency - கிளர்ச்சி, எதிரெழுச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல், சட்டப்படியான ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல், கலகஞ்செய்தல், புரளி கிளப்புதல் - கிளர்ச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல், போராட்டம் அல்லது கலகம் என்பது கட்டளைக்கெதிரான கீழ்ப்படிவின்மை அல்லது புறக்கணிப்பாகும். ஆகவே, இது அரசாங்கம் அல்லது அரச தலைமை அதிகாரத்தினை அழிக்கும் அல்லது மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.

English
Purposefully causing damage to institutions, manufacturing facilities, or social procedures to achieve a sociopolitical objective. See also insurgency and ecotage.