sadomasochism

பிறரையும், தன்னையும் துன்புறுத்தி உடலின்பம் / சிற்றின்பம் காணும் தன்மை

தமிழ் விளக்கம்

sadism என்றால் துன்பூட்டுவேட்கை, தாக்கின்பமடைதல். masochism என்றால் வலியேற்பு வெறி அதாவது அடக்கிக் கொடுமை செய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்ப நிலை. sadomasochism என்றால் பிறரால் துன்புறுத்தப்படுவதை ஏற்று, உடலின்பமடையும் மனநிலை - தன்னைத்தானே துன்புறுத்திக்கொண்டு மகிழ்ச்சி அடையும் மனநிலை ஒருவருக்குள்ளாகவோ அல்லது இரண்டு பேருக்கு இடையிலோ இருக்கலாம். துன்புறுத்தப்படும் நபர், பொறுமை காப்பதே, அவரை மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும்.
பார்க்க; masochism - வலியேற்பு வெறி, masochistic personality disorder - வலியேற்பு வெறி சார்ந்த ஆளுமைக்கோளாறு, தோல்வி / துயர் / வலி விரும்பும் ஆளுமைக்கோளாறு.
இருவருக்கிடையே ஏற்படும் ஒரே மாதிரியான மனக்கோளாறு - (folie à deux - folie, madness உளக்கோளாறு + à, between + deux, two இருவருக்கிடையே) - நெருக்கமான இருவர் மாயத்தோற்றங்களை நம்புவதும் / எண்ண மயக்கங்களுக்கு இரையாகும் மனக்கோளாறு (உ.ம். தங்களுடைய அண்டை வீட்டார் தங்களை ஏளனம் செய்கிறார்கள் என்று தம்பதியினர் நினைப்பது / தங்களுக்கு உறவினர்கள் செய்வினை செய்துவிட்டார்கள் என்று நினைப்பது இவ்வகைக் கோளாறில் அடங்கும்.

English

The presence, within an individual or between couples, of cruel, punishing behavior and behavior that is self-destructive. For example, in a sadomasochistic relationship, one person would persist in cruel behavior to the other, and the other would remain in the relationship and encourage more of the cruelty. See also masochism, masochistic personality disorder, and folie à deux.