safety net

(சமூகப்) பாதுகாப்பு வலை

தமிழ் விளக்கம்

தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையிலிருப்பவர்களுக்கு, வருமானம் மற்றும் இருப்பிடம் போன்ற தகுதி வரையறைகளை அளவுகோலாகக் கொள்ளாது, அவர்கள் எளிதில் அணுகிப் பெற்றுக் கொள்ளும்படியாகக் கிடைக்கும் உதவிகள். சமூகப்பாதுகாப்பு வலை என்பது அரசின் சமூக நலத்திட்டங்கள், இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகுபவர்களுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தப்படும் காப்பீடுத் (ஆயுள், மருத்துவம், விபத்து) திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள் போன்றவைகளையும், தனியார் சேவை நிறுவனங்களின் உதவிகளையும் உள்ளடக்கியதாகும்.
பார்க்க: residual welfare provision - பின் தங்கியவர்களுக்கான சமூகநல உதவிகள் - குடும்பத்தின் மூலமாகவோ, பிற சமூக அமைப்புகள் மூலமாகவோ அல்லது சந்தையின் மூலமாகவோ தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளமுடியாத அசாதாரணச் சூழலுக்கு ஆட்பட்டவர்களுக்கு மட்டும் சமூக சேவைகளும், பிற பொது உதவிகளும் வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தாக்கம். வழங்கப்படும் உதவிகள் மூலம் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி, மீண்டும் சமூக அமைப்புகளைத் தங்களின் தேவைப் பூர்த்திக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே இக்கருத்தாக்கத்தின் மையக் குறிக்கோள் / அனுமானம்.

English

The idea that if some social services programs are eliminated through economic cutbacks, benefits and programs of last resort will remain for individuals or families that cannot find needed resources on their own. See also residual welfare provision.