Sage, Margaret Slocum (1816-1918)

மார்கரெட் ஸ்லோகம் சேஜ் (1816 - 1918)

தமிழ் விளக்கம்

மார்கரெட் ஸ்லோகம் சேஜ் (1816 - 1918) - அமெரிக்காவின் தொழிலதிபரும், தனவந்தருமான சேஜ் அவர்களின் மனைவி. சரியான சமூகவியல் ஆய்வுகளின் மூலமும், அந்த ஆய்வுகளைப் பிரசுரிப்பதன் மூலமும் அமெரிக்க மக்களின் மேம்பாட்டிகு உதவும் குறிக்கோளுடன், தன் கணவர் நினைவாக, மார்க்ரெட் ஸ்லோகம் சேஜ் (Margret Slocum Sage 1816 - 1918) அவர்களால், 1907 ஆம் ஆண்டுரஸ்சேல் சேஜ் அறக்கட்டளை (Russell Sage Foundation) ஆரம்பித்து, அதை உலகின் முன்னணி அறக்கட்டளையாக வளர்த்தெடுக்க அடிகோலினார். சமூக ஆய்வையும், பிரசுரித்தலையும் பிரதான நோக்கமாகக் கொண்ட ரஸ்ஸல் சேஜ் அறக்கட்டளை, அமெரிக்கக் கலாச்சாரம், புலம்பெயர்ந்தவர்கள், அமெரிக்கத் தொழிலாளர்களின் எதிர்காலம், சமூக சமத்துவமின்மை, பொருளாதார நடத்தை போன்ற தலைப்புகளில் திருப்புமுனையாகக் கருதத்தக்க குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளையும், பிரசுரங்களையும் செய்துள்ளன. சமூக நலக்கொள்கைகள் பற்றி இந்த அறக்கட்டளை செய்த ஆய்வுகளும், பிரசுரங்கங்களும் சமூகப்பணி ஒரு திறத்தொழிலாக உருவாகப் பெரிய அளவில் உதவியது. சமூகப்பணி தொடர்பான முக்கிய இலக்கியங்கள் இந்த அறக்கட்டளையால் பிரசுரிக்கப்பட்டது. .
பார்க்க: DeForest, Robert Weeks - டீ பாரஸ்ட், ராபர்ட் வீக்ஸ் (1848–1931) - தயாள குணம் கொண்டவர். சமூக சீர்திருத்தவாதி. உலகின் முதல் சமூகப் பணிக் கல்லூரியை (நியூயார்க் அறப்பணிப் பள்ளி New York School of Philanthropy - தற்போது கொலம்பியா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட சமூகப் பணிக் கல்லூரி) உருவாக்கக் காரணமாயிருந்தவர். ரஸ்ஸல் சேஜ் என்ற அறநிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். ஏழைகளின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர்.

English

Philanthropist and creator of the Russell Sage Foundation to improve the social and living conditions in the United States. As the widow of Russell Sage, she helped fund the early organizations, conferences, and publications that became the knowledge base of the new field of social work.