Salomon, Alice (1872-1948)
சாலமன் ஆலிஸ் (1872 - 1948)
தமிழ் விளக்கம்
சாலமன் ஆலிஸ் (1872 - 1948) - ஜெர்மனியில் சமூகப்பணிக் கல்வி உருவாவதற்கும், பரவுவதற்கும் காரணமாயிருந்த சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி. சமூக சேவைக்காக, 1899 இல் பெண்கள் குழுவை ஆரம்பித்து, அவர்களுக்குப் பயிற்சியளிக்க ஓராண்டு பயிற்சி வகுப்புகளைத் தொடங்க, அதுவே 1908 ல் இரண்டாண்டு சமூகப்பணிக் கல்வியாக உருவெடுத்தது. முதலாம் உலகப்போருக்கு முன்னும் பின்னும் போரினால் ஏற்பட்ட விளவுகளை எதிர்கொள்ள இவரால் பயிற்றுவிக்கப்பட்ட சமூகப்பணியாளர்கள் பெரும் பங்கை ஆற்றினார்கள். நாஜி இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் ஜெமனியிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இவரின் நினைவாக, இவரின் பெயரைத் தாங்கிய சமூகப்பணிக்கல்லூரி பெர்லின் நகரில் செயல்படுகிறது.
English
One of the principal founders of professional social work in Germany and the creator of German social work education. As a young social reformer and feminist leader in 1893, she helped establish the Girls' and Women's Groups for Social Aid Work, and in 1899 she cofounded the first one year course in vocational welfare training, which in 1908 became a two-year training program. She was a leader in the development of social work as a profession for women and for men before, during, and after World War I. She led in efforts to restore the nation after the war and fought the Nazi movement until being forced to emigrate in 1937. A leading German school of social work in Berlin bears her name.