Salvation Army

இரட்சணிய சேனை

தமிழ் விளக்கம்

இரட்சணிய சேனை ஒரு அனைத்துலகக் கிறித்தவ நற்செய்தி இயக்கமாகும். இவ்வியக்கம் தற்போது 118 நாடுகளில் இயங்கி வருகிறது. இரட்சணிய சேனை இயக்கத்தின் தலைமைச் செயலகம் இலண்டன் நகரின் குயீன் விக்டோரியா சாலையில் அமைந்துள்ளது. லண்டனில் உள்ள நாட்டிங்காமில், வில்லியம் பூத் (பிறப்பு 1829) மற்றும் அவரது மனைவி காதரின் பூத் என்பவர்களால் 1865 ஆம் ஆண்டு, கிழக்கு இலண்டனில் அறவியக்கமாக இரட்சணிய சேனை துவக்கப்பட்டது. இவ்வியக்கம் அரை - இராணுவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இரட்சணிய சேனையானது கிறித்தவ சுவிசேஷம் மற்றும் சமூக சேவைப் பணிகளை ஏழை எளியவர்களிடத்திலும், திக்கற்றவர்களிடத்திலும் செய்து வருகிறது. இந்தியாவில் இந்த அமைப்பு 1882 ஆம் ஆண்டிலும், இலங்கையில் 1883 ஆ‌ம் ஆண்டிலும், மலேசியாவில் 1938 ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டது. நேபாளத்தில் இந்த அமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை.

English

An international religious service organization involved in philanthropic and evangelical work. Founded in England in 1878 by William Booth, it is patterned after military structures, including uniforms and military rank, because its goal is to wage war against evil and against human suffering. It has programs in nearly 100 nations, with its international headquarters in London. It operates hospitals, community centers, social work agencies, alcohol and drug rehabilitation centers, emergency care facilities, disaster relief services, and the well-known soup kitchen.